BiggBoss Tamil TRP : டி.ஆர்.பி.யில் மரண அடி.... பிரபல சீரியலை Beat பண்ண முடியாமல் தவிக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி

Ganesh A   | Asianet News
Published : Dec 31, 2021, 08:14 AM IST

வழக்கமாக பிக்பாஸ் நிகழ்ச்சி நடக்கிறது என்றால், அந்த 100 நாட்களுக்கு இதர நிகழ்ச்சிகளோ, சீரியல்களோ கிட்ட கூட நெருங்க முடியாத அளவுக்கு அந்நிகழ்ச்சியின் டி.ஆர்.பி. இருக்கும்.

PREV
18
BiggBoss Tamil TRP : டி.ஆர்.பி.யில் மரண அடி.... பிரபல சீரியலை Beat பண்ண முடியாமல் தவிக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி

உலகளவில் பிரபலமான ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் கடந்த 2017-ம் ஆண்டு தமிழில் அறிமுகமானது. விறுவிறுப்புக்கும், பரபரப்புக்கும் பஞ்சமில்லாத இந்நிகழ்ச்சி அந்த ஆண்டே ரசிகர்களின் பேவரைட் நிகழ்ச்சியாக மாறியது.

28

இந்நிகழ்ச்சியின் கூடுதல் சிறப்பு என்றால் அது கமல்ஹாசன் தான். அவர் தொகுத்து வழங்கும் விதம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்ததால், இன்றளவும் 5-வது சீசன் வரை அவரே தொகுத்து வழங்கி வருகிறார்.

38

பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில், ஆரவ்வும், இரண்டாவது சீசனில் ரித்விகாவும், மூன்றாவது சீசனில் முகினும், நான்காவது சீசனில் ஆரியும் டைட்டில் வின்னர்களாகினர்.

48

தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசன் நடந்து வருகிறது. இந்த சீசன் ஆரம்பத்தில் சற்று விறுவிறுப்பாக இருந்தாலும், தற்போது டல் அடிக்க ஆரம்பித்துவிட்டது. அதன்விளைவு அதன் டி.ஆர்.பி ரிசல்ட் தான்.

58

வழக்கமாக பிக்பாஸ் நிகழ்ச்சி நடக்கிறது என்றால், அந்த 100 நாட்களுக்கு இதர நிகழ்ச்சிகளோ, சீரியல்களோ கிட்ட கூட நெருங்க முடியாத அளவுக்கு அந்நிகழ்ச்சியின் டி.ஆர்.பி. இருக்கும்.

68

கடந்த 4 சீசன்களாக இதே நிலையே தொடர்ந்து வந்த நிலையில், தற்போது பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி டி.ஆர்.பி.யில் மரண அடி வாங்கி உள்ளது. இதனால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ஷாக் ஆகி உள்ளனர்.

78

பிக்பாஸ் நிகழ்ச்சியை டி.ஆர்.பி.யில் ஓரங்கட்டியது கயல் என்கிற சீரியல் தான். டி.ஆர்.பி.யில் பிக்பாஸை பின்னுக்கு தள்ளிய முதல் சீரியல் என்ற பெருமையை கயல் சீரியல் பெற்றுள்ளது.

88

இதனால் அந்த சீரியல் குழுவினர் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர். சன் டிவியில் ஒளிபரப்பாகும் கயல் சீரியலில் ஹீரோவாக ராஜா ராணி சீரியல் பிரபலம் சஞ்சீவ் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக சைத்ரா ரெட்டி நடித்துள்ளார். 

Read more Photos on
click me!

Recommended Stories