கத்ரீனா கைஃப் மற்றும் விக்கி கௌஷலின் திருமணம் குறித்த செய்திகள் தான் தற்போது பாலிவுட் திரையுலகின் ஹாட் டாப்பிக். இந்நிலையில் இவர்கள் இருவரும் நீதிமன்றத்தில் நெருங்கிய உறவினர்கள், முன்னிலையில் இன்று திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல்களும் தொடர்ந்து வெளியாகி வருகிறது.
அதாவது இன்றைய தினம் 1954 சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் இருவரும், பதிவு திருமணம் செய்து கொண்ட பின்னர், குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் உரிய சடங்குகளுடன் திருமணம் நடைபெற உள்ளது.
இவர்களது திருமணத்திற்கு ரகசிய குறியீடுடன் மிகவும் முக்கியமானவர்கள் மட்டுமே அழைக்கப்பட்டிருக்கும் நிலையில், பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகரும், கத்ரீனா கைஃபின் முன்னாள் காதலருமான நடிகர் ரன்பீர் கபூர், மற்றும் சல்மான் கான் ஆகியோருக்கு அழைப்பு விடுக்க வில்லை என கூறப்படுகிறது.
சமீபத்தில், இணையதள ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த சல்மான் கானின் சகோதரி அர்பிதா கான், கத்ரீனா மற்றும் விக்கியின் திருமணத்திற்கு, தனக்கும், சல்மான் கானுக்கும் எவ்வித அழைப்பும் விடுக்கப்படவில்லை, என்பதை உறுதி படுத்தியள்ளார்.
அதே போல் கத்ரீனா தனது முன்னாள் காதலரும், நடிகரும் ரன்பீர் கபூரையோ அல்லது அவரது குடும்பத்தினரையோ அழைக்கவில்லை என்று ஊகிக்கப்பட்டுள்ளது. ஆறு வருடங்களுக்கும் மேலாக காதலித்து வந்த கத்ரீனாவும் ரன்பீரும் பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக கூறப்படுகிறது. ஜக்கா ஜாசூஸ் படப்பிடிப்பின் போது, லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ரன்பீர் கபூருக்கு அவர் அழைப்பு விடுக்கவில்லை என்பது சாதாரணமாக பார்க்கப்பட்டாலும்.. சல்மான் கான் காதலித்து பிரிந்த பின்னரும் நல்ல நட்பில் இருந்தனர். தொடர்ந்து பல படங்களில் இவர் கானுடன் பணியாற்றியும் வந்தார். அதே போல் சல்மான் கான் சகோதரி திருமணத்திலும் கடந்த 2014 ஆம் ஆண்டு கலந்து கொண்டார் என்பது அனைவரும் அறிந்ததே..