Katrina Kaif Son Name : மகனின் பெயர் சொல்ல கத்ரீனா கைஃப் கொடுத்த ஹைப்.. அப்படி என்ன பெயர் தெரியுமா?

Published : Jan 07, 2026, 06:14 PM IST

பாலிவுட் நட்சத்திர நடிகையும், விக்கி கௌஷலின் மனைவியுமான கத்ரீனா கைஃப், தனது மகனின் அழகிய புகைப்படத்துடன் அவரது பெயரை வெளியிட்டுள்ளார்.

PREV
18

பாலிவுட் நட்சத்திர நடிகையும், விக்கி கௌஷலின் மனைவியுமான கத்ரீனா கைஃப், தனது மகனின் பெயரை உலகிற்கு அறிமுகப்படுத்தியுள்ளார்.

28

தனது மகனின் பெயர் ‘விஹான் கௌஷல்’ என்று கத்ரீனா கைஃப் தனது அதிகாரப்பூர்வ சமூக ஊடகக் கணக்கில் பதிவிட்டுள்ளார்.  

38

அந்த பதிவின் மூலம், தனது செல்ல மகன் விஹானின் கை படத்தை சமூக வலைதளங்களில் கத்ரீனா பகிர்ந்துள்ளார்.    

48

கத்ரீனா கைஃப் மற்றும் விக்கி கௌஷல் தம்பதிக்கு நவம்பர் 07, 2025 அன்று ஆண் குழந்தை பிறந்தது. தற்போது குழந்தைக்கு விஹான் என பெயரிட்டுள்ளனர். 

58

கடந்த 2025-ம் ஆண்டு நடிகர் விக்கி கௌஷல் மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான 'சாவா' திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது.

68

'சாவா' படத்திற்குப் பிறகு, நடிகர் விக்கி கௌஷல் பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் நடிகர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளார். தற்போது அவருக்கு பல வாய்ப்புகள் வருகின்றன.

78

நடிகை கத்ரீனா கைஃப் தற்போது சினிமாத்துறையில் இருந்து விலகி இருக்கிறார். கணவர், குழந்தை, குடும்பம் என இல்லத்தரசியாகப் பொறுப்பேற்றுள்ளார்.

88

மொத்தத்தில், தனது இரண்டு மாத குழந்தையின் கை புகைப்படத்தை கத்ரீனா வெளியிட்டுள்ளார். ஆனால், முகத்தை இன்னும் காட்டவில்லை. மகனின் முகத்தை எப்போது காட்டுவார் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories