Vicky Kaushal- Katrina Kaif: அடேங்கப்பா 80 கோடி வியாபாரமா? கண்டிஷன் போட்டு கல்யாணம் செய்து காசு பார்த்த ஜோடி!

Published : Dec 10, 2021, 12:51 PM ISTUpdated : Dec 10, 2021, 01:03 PM IST

கத்ரீனா (Katrina) - விக்கி (Vicky Kaushal) ஜோடியின் திருமணம் நேற்று மிகவும் பிரமாண்டமாக நடந்து முடிந்த நிலையில், தற்போது இவர்களின் திருமணத்தை படம் பிடித்து ஒளிபரப்ப பிரபல ஓடிடி நிறுவனம் சுமார் 80 கோடியை அள்ளி கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  

PREV
18
Vicky Kaushal- Katrina Kaif: அடேங்கப்பா 80 கோடி வியாபாரமா? கண்டிஷன் போட்டு கல்யாணம் செய்து காசு பார்த்த ஜோடி!

டிசம்பர் 9 ஆம் தேதி, (நேற்று) நடிகை கத்ரீனா கைஃப் சொந்த பந்தங்கள் சூழ அனைவரது ஆசீர்வாதத்துடன் அக்னி சாட்சியாக தனது நீண்ட நாள் காதலன் விக்கி கௌஷலை திருமணம் செய்து கொண்டார்.

 

28

கத்ரீனாவும், விக்கியும் முதலில் இந்து முறைப்படி திருமணம் செய்து கொள்ளவுள்ளனர் என்றும்,  பின்னர் இருவரும் கிறிஸ்துவ முறைப்படி வெள்ளை திருமணமும் செய்து கொள்ள உள்ளதாக கூறப்பட்டது.

 

38

அந்த வகையில் நேற்று, இந்து முறைப்படி கத்ரீனா-விக்கியின் திருமணம் நடந்த நிலையில், அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டு வந்தது.

 

48

இவர்களது பிரமாண்ட திருமணத்தில் 120 பேர் மட்டுமே கலந்து கொண்ட நிலையில், விருந்தினர்கள் யாரும் மொபைல் அல்லது கேமரா எடுத்து வர தடை விதிக்கப்பட்டது. இதுகுறித்து கண்டிஷனை விக்கி - கத்ரீனா ஜோடி தங்களுடைய திருமண பத்திரிகைகளிலும் குறிப்பிட்டிருந்தனர் என்பது அனைவரும் அறிந்தது தான்.

 

58

இதற்க்கு முக்கிய காரணமாக கூறப்பட்டது என்னவென்றால், இந்த ஜோடி தங்கள் திருமணத்தின் காட்சி உரிமையை ஓடிடி நிறுவனத்திற்கு பெரிய தொகைக்கு வழங்க உள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியான நிலையில் தற்போது இதுகுறித்த விவரம் தெரியவந்துள்ளது.

 

68

அதாவது இவர்களுடைய திருமண நிகழ்ச்சியை படம் பிடித்து ஒளிபரப்ப, விக்கி - கத்ரீனா தம்பதிக்கு சுமார் 80 கோடி கொடுத்துள்ளதாம் அமேசான் பிரைம் நிறுவனம்.

 

78

இதனால் தான் திருமணத்துக்கு வரும் எவ்வளவு பெரிய விஐபியாக இருந்தாலும் போட்டோ, வீடியோ எடுக்கக்கூடாது, சோஷியல் மீடியாவில் எதையும் பகிரக்கூடாது என்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

88

எப்படியோ கோடி கணக்கில் திருமணத்திற்கு செலவு செய்த பணத்தை... சத்தமே இல்லாமல் ஒரேயடியாக வசூல் செய்துவிட்டது இந்த ஜோடி...

 

click me!

Recommended Stories