Katrina Kaif Haldi: முகம் முழுக்க மஞ்சள் பூசி.. ரொமான்ஸ் குறையாத விக்கி - கத்ரீனா ஹல்தி கொண்டாட்டம்! போட்டோஸ்!

Published : Dec 11, 2021, 02:14 PM IST

பாலிவுட் புதிய நட்சத்திர ஜோடிகளான கத்ரீனா கைஃப் (Katrina Kaif)மற்றும் விக்கி கௌஷல் (Vicky Kaushal) ஆகியோர் திருமணத்திற்கு முன்னதாக கொண்டாடிய ஹல்தி கொண்டாட்ட புகைப்படங்களை தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளனர்.  

PREV
15
Katrina Kaif Haldi: முகம் முழுக்க மஞ்சள் பூசி.. ரொமான்ஸ் குறையாத விக்கி - கத்ரீனா ஹல்தி கொண்டாட்டம்! போட்டோஸ்!

திருமணம் முடிந்த கையேடு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக, தங்களது திருமண புகைப்படங்களை வெளியிட்ட கத்ரீனா - விக்கி ஜோடி தற்போது தங்களது ஹல்தி புகைப்படங்களை வெளியிட அது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

 

25

கத்ரீனா - விக்கி கௌஷல் திருமணம் டிசம்பர் 9 அன்று ராஜஸ்தானின் அழகிய நகரமான சவாய் மாதோபூரில் அவர்களது நெருங்கிய குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மத்தியில் நடந்தது. 120 நபர்கள் மட்டுமே அழைக்கப்பட்ட இவர்களுடைய திருமண சடங்குகள் 3 நாட்கள் நடந்தது.

 

35

இது டிசம்பர் 7 அன்று தொடங்கிய நிகழ்ச்சியில், மெஹந்தி, ஹல்தியை தொடர்ந்து திருமணமும் நடந்தது. இவர்களின் திருமணத்தில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள்  எடுக்க தடை விதிக்கப்பட்ட போதிலும் எப்படியோ சில புகைப்படங்களும், வீடியோக்களும் வெளியானது.

 

45

இதை தொடர்ந்து, தங்களின் திருமண புகைப்படத்தை கத்ரீனா மற்றும் விக்கி கௌஷல் தங்களின் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட நிலையில், தற்போது இவரகளது ஹல்தி புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

 

55

இதனை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு, விக்கி கௌஷல் (நன்றி. பொறுமை. மகிழ்ச்சி) என தெரிவித்துள்ளார். இதில் சற்றும் ரொமான்ஸுக்கு குறைவில்லாமல் கத்ரீனா - விக்கி இருவரும் முகம் நிறைய மஞ்சள் பூசியபடி உள்ளனர். இந்த புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருவதோடு ஒரு மணி நேரத்தில் 2 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளை குவித்துள்ளது.

 

click me!

Recommended Stories