Roja Serial: 'ரோஜா' சீரியல் பிரபலத்திற்கு குவா... குவா..! குழந்தையின் கியூட் புகைப்படத்தோடு தெரிவித்த ஷாமிலி!

Published : Dec 11, 2021, 01:40 PM IST

ரோஜா சீரியலில் (Roja Serial), அனு என்கிற கதாபாத்திரத்தில் முரட்டு வில்லியாக நடித்து வந்த ஷாமிலி (Shamili)... கர்ப்பமாக இருப்பதால் இந்த சீரியலில் இருந்து விலகிய நிலையில், தற்போது இவருக்கு அழகிய குழந்தை பிறந்துள்ள தகவலை அவரே, இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.  

PREV
17
Roja Serial:  'ரோஜா' சீரியல் பிரபலத்திற்கு குவா... குவா..! குழந்தையின் கியூட் புகைப்படத்தோடு தெரிவித்த ஷாமிலி!

சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'ரோஜா' சீரியலுக்கு இல்லத்தரசிகள் மத்தியில் தொடர்ந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த சீரியலில் பல்வேறு திருப்பு முனைகள் இருப்பதால், சீரியலின் மீதான ஆர்வமும் அதிகரித்து கொண்டே செல்கிறது.

 

 

27

அழகிய குடும்பத்தையும், விபத்தில் பிரிந்த தாய் , தந்தை, மகள் எப்படி பல்வேறு பிரச்சனைகளை கடந்து ஒன்று சேர்கிறார்கள் என்பதை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வருகிறது.

 

37

தற்போது அனைத்தும் கூடி வந்துள்ள நிலையில், யாரும் எதிர்பாராத பல ட்விஸ்டுகள் நடந்து கொண்டிருப்பதால்,  டி.ஆர்.பியிலும் கெத்து காட்டி வருகிறது.

 

47

இந்த சீரியலில் ரோஜா என்கிற கதாபாத்திரத்தில், பிரியங்கா நல்கரி நாயகியாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக அர்ஜுன் பிரதாப் என்கிற கதாபாத்திரத்தில் சிபு சூரியன் நடித்து வருகிறார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் பலர் காயத்திரி, ராஜேஷ், வடிவுக்கரசி உள்ள பலர் நடித்து வருகிறார்கள்.

 

57

மேலும் இந்த சீரியலில் அதிரடி வில்லையாக ஷாமிலி நடித்து வருகிறார். இவர் தன்னுடைய யூ டியூப் பக்கத்தின் மூலம், கர்ப்பமாக இருப்பதை அறிவித்த சில மாதங்களில், கொரோனா காலம் என்பதால் உடல்நிலையை கருத்தில் கொண்டு சீரியலை விட்டு விலகுவதாக அறிவித்தார்.

 

 

67

இந்த சீரியலில் இருந்து இவர் விலகி விட்டாலும், சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்டிவாக இருந்த, ஷாமிலி அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் வளைகாப்பு குறித்த வீடியோக்களை இன்ஸ்டாகிராம் மற்றும் யூ டியூப் பக்கத்தில் வெளியிட்டு வந்தார்.

 

 

77

இந்நிலையில், இவருக்கு அழகிய பெண் குழந்தை பிறந்த தகவலை குழந்தையின் முகம் தெரியாதபடி எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து பலர் ஷாமிலிக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

 

 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories