Top 5 Movies : 2026ல் அதிக வசூலை வாரிசுருட்டி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த டாப் 5 தமிழ் படங்கள் என்னென்ன?

Published : Jun 03, 2026, 02:02 PM IST

Top 5 Highest Grossing Tamil Movies : 2026-ம் ஆண்டு தொடங்கி தற்போது ஐந்து மாதங்கள் நிறைவடைந்துவிட்டன. இந்த ஐந்து மாதங்களில் தமிழ் சினிமா தந்த பிளாக்பஸ்டர் ஹிட் படங்களைப் பற்றி பார்க்கலாம்.

PREV
16
Top 5 Blockbuster Hit Tamil Movies in 2026

2026-ம் ஆண்டு தமிழ் சினிமாவுக்கு பல்வேறு ஆச்சர்யங்களும், எதிர்பாரா வெற்றிகளும் நிறைந்த ஆண்டாகவே இருந்துள்ளது. இந்த ஆண்டு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பராசக்தி, லவ் இன்சூரன்ஸ் கம்பெனி, கர போன்ற படங்களெல்லாம் பிளாப் ஆனபோதிலும் சிறு பட்ஜெட் படங்கள் எதிர்பாரா வெற்றியை ருசித்துள்ளதோடு பாக்ஸ் ஆபிஸிலும் பன்மடங்கு வசூலித்து மாஸ் காட்டி இருக்கின்றன. இந்த ஆண்டு சூர்யா, ஜீவா, ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் ஆகியோருக்கு கம்பேக் ஆண்டாகவும் அமைந்துள்ளது. இந்த ஆண்டின் பிளாக்பஸ்டர் ஹிட் படங்கள் என்னென்ன என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

26
1. கருப்பு

2026-ம் ஆண்டின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் வெற்றியை ருசித்த படமென்றால் அது சூர்யாவின் கருப்பு தான். ஆர்.ஜே.பாலாஜி இயக்கிய கருப்பு திரைப்படம் ரிலீஸ் தேதியன்று பைனான்ஸ் பிரச்சனையில் சிக்கி ஒரு நாள் தாமதமாகவே திரைக்கு வந்தது. சூர்யாவுக்கு தியேட்டரில் பிளாக்பஸ்டர் வெற்றி கிடைத்து 10 ஆண்டுகளுக்கு மேல் ஆன நிலையில், அந்த 10 வருட காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தது கருப்பு. இந்த ஆண்டு அதிக வசூல் அள்ளிய தமிழ் படம் என்கிற சாதனையையும் கருப்பு படைத்துள்ளது. இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.300 கோடிக்கு மேல் வசூலை வாரிசுருட்டியது குறிப்பிடத்தக்கது.

36
2. தாய் கிழவி

2026-ல் எதிர்பாரா வெற்றியை பெற்ற படங்களில் தாய் கிழவியும் ஒன்று. சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்த இப்படத்தை சிவக்குமார் முருகேசன் என்கிற புதுமுக இயக்குநர் இயக்கி இருந்தார். இப்படம் கடந்த பிப்ரவரி மாதம் திரைக்கு வந்தது. இப்படம் உலகளவில் ரூ. 82 கோடி வசூலை வாரிக்குவித்து இருந்தது. இதில் தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸில் மட்டும் ரூ. 63 கோடி வசூலித்திருந்த இப்படம் வெளிநாடுகளில் 10 கோடியும், பிறமாநிலங்களில் ரூ.9 கோடியும் வசூலித்திருந்தது.

46
3. யூத்

சினிமாவில் முதல் படத்திலேயே பிரம்மாண்ட வெற்றியை பெறுவது சாதாரண விஷயமல்ல, அதுவும் அப்படத்தை இயக்கியதோடு மட்டுமின்றி அதில் ஹீரோவாகவும் நடித்து பிளாக்பஸ்டர் வெற்றியை ருசித்திருக்கிறார் கென் கருணாஸ். அவர் இயக்கிய யூத் திரைப்படம் கடந்த மார்ச் மாதம் திரைக்கு வந்து அமோக வரவேற்பை பெற்றது. அப்படத்தின் பட்ஜெட் 10 கோடிக்கும் குறைவு தான். ஆனால் அப்படம் உலகளவில் ரூ.72 கோடி வசூலை வாரிசுருட்டி இருந்தது. இதில் தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸில் மட்டும் யூத் படம் ரூ.49 கோடி வசூலித்திருந்தது.

56
4. தலைவர் தம்பி தலைமையில்

தமிழ் சினிமாவுக்கு இந்த ஆண்டு முதல் பிளாக்பஸ்டர் ஹிட்டாக அமைந்த படம் தலைவர் தம்பி தலைமையில். நடிகர் ஜீவா ஹீரோவாக நடித்த இப்படத்தில் தம்பி ராமையா, இளவரசு, பிரார்த்தனா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. இப்படம் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆனது. கண்ணன் ரவி தயாரித்த இப்படம் தியேட்டர்களில் சக்கைப்போடு போட்டு உலகளவில் ரூ.40 கோடி வசூலை வாரிக்குவித்து இருந்தது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.30 கோடி வசூலித்திருந்தது. நடிகர் ஜீவாவிற்கு தரமான கம்பேக் படமாக இது அமைந்தது.

66
5. பிளாஸ்ட்

லேட்டா வந்தாலும் லேட்டஸ்டாக இந்த பட்டியலில் இணைந்துள்ள படம் பிளாஸ்ட். இப்படம் கடந்த வாரம் தான் தியேட்டருக்கு வந்தது. இது ஒரு சர்ப்ரைஸ் ஹிட் படம் என்றே சொல்லலாம். ஏனெனில் ஆரவாரம் இன்றி ரிலீஸ் ஆன இப்படம் பாசிடிவ் விமர்சனங்களால் தற்போது திரும்பிய பக்கமெல்லாம் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது. பிளாஸ்ட் படம் அர்ஜுனுக்கு ஒரு கம்பேக் படமாக அமைந்துள்ளது. இப்படம் தற்போது வரை உலகளவில் ரூ.31 கோடி வசூலித்து தொடர்ந்து வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories