Karuppu Box Office Collection : சூர்யாவை பாக்ஸ் ஆபிஸ் கிங் ஆக மாற்றிய கருப்பு... 4ம் நாள் வசூல் இத்தனை கோடியா?

Published : May 19, 2026, 10:07 AM IST

Karuppu Movie Day 4 Box Office : நடிகர் சூர்யா நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் ஹவுஸ் ஃபுல் ஆக ஓடிக் கொண்டிருக்கும் கருப்பு திரைப்படத்தின் 4ம் நாள் வசூல் நிலவரத்தை பார்க்கலாம்.

PREV
14
Karuppu Movie Day 4 Box Office

தியேட்டர்ல ஒரு பெரிய ஹிட் இல்லாம 13 வருஷங்கள். சரியா சொல்லணும்னா, 4,697 நாட்கள்... நடிகர் சூர்யாவுக்கு ஒரு மாபெரும் தியேட்டர் வெற்றி கிடைச்சு ரொம்ப நாளாச்சு. இத்தனை வருஷமா அவரோட ஒவ்வொரு ரசிகரும், பொதுவான சினிமா பிரியர்களும் ஒரு பெரிய ஹிட் படத்துக்காக காத்துட்டு இருந்தாங்க. 13 வருஷத்துக்குப் பிறகு, எங்க விட்டாரோ அங்கிருந்தே அதே பவரோட தியேட்டருக்கு ஒரு மாஸான கம்பேக் கொடுத்திருக்கார் சூர்யா, 'கருப்பு' படம் மூலமா. ரிலீஸ் ஆன வெறும் 4 நாள்ல, இந்தப் படம் உலக அளவுல 147 கோடி ரூபாய்க்கு மேல வசூல் பண்ணி, சூர்யாவோட சினிமா கேரியர்லயே ஒரு பெரிய ரெக்கார்டை நோக்கி போயிட்டு இருக்கு. 'புக் மை ஷோ' ஆப்ல மட்டுமே 2 மில்லியனுக்கும் அதிகமான டிக்கெட்டுகள் இதுவரைக்கும் விற்பனையாகியிருக்கு.

24
சாதனைகளை முறியடிக்கும் கருப்பு

தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா, கேரளா என பிற மாநிலங்களிலும் இந்தப் படத்துக்கு மக்கள் கிட்ட இருந்து அமோக வரவேற்பும், நல்ல வசூலும் கிடைச்சிருக்கு. முதல் மூன்று நாளும் உலகம் முழுக்க தியேட்டர்கள்ல ஹவுஸ்ஃபுல் மற்றும் ஃபாஸ்ட் ஃபில்லிங் ஷோக்களா ஓடிட்டு இருக்கு. இதுக்கு முன்னாடி, சூர்யாவோட 'சிங்கம் 2' படம்தான் தியேட்டர்ல அதிக வசூல் செஞ்ச படமா இருந்துச்சு. ஆனா, அந்த சாதனையை 'கருப்பு' படம் வெறும் 4 நாள்லயே முறியடிச்சு, ஒரு வரலாற்று வெற்றியை நோக்கி போயிட்டு இருக்கு. ஆர்.ஜே. பாலாஜி இயக்கியிருக்கிற இந்தப் படம், சூர்யா ரசிகர்களை மட்டுமின்றி ஃபேமிலி ஆடியன்ஸையும் வெகுவாக கவர்ந்துள்ளது.

இதையும் படியுங்கள்… This Week OTT Releases : மே 18 முதல் 24 வரை இந்த வாரம் ஓடிடியில் போட்டிபோட்டு ரிலீஸ் ஆகும் படங்கள் மற்றும் வெப் சீரிஸ் இதோ

34
4ம் நாள் வசூல் நிலவரம்

வீக் எண்டில் வசூல் வேட்டையாடிய கருப்பு திரைப்படம் வார நாட்களில் டல் அடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படம் தன்னுடைய வேகம் குறையாமல், வார நாட்களிலும் செம வசூல வேட்டையாடி வருகிறது. குறிப்பாக திங்கட்கிழமைகளில் டபுள் டிஜிட்டில் வசூல் வருவது ஒரு சில பெரிய படங்களுக்கு மட்டுமே சாத்தியம். அந்த வரிசையில் கருப்பு திரைப்படமும் இணைந்துள்ளது. இதில் ஆச்சர்யம் என்னவென்றால் நேற்று ஒரே நாளில் தமிழ்நாட்டில் மட்டுமே இப்படம் 10 கோடிக்கு மேல் வசூலை வாரிக் குவித்துள்ளது.

44
உலகளாவிய வசூல் எவ்வளவு?

இதன்மூலம் கருப்பு திரைப்படம் நான்கு நாட்களில் 150 கோடி வசூலை தாண்டி சாதனை படைத்துள்ளது. இப்படம் நான்கு நாட்களில் உலகளவில் 164 கோடி வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் தமிழ்நாட்டில் 70 கோடிக்கு மேல் வசூலித்துள்ள இப்படம், தெலுங்கு மாநிலங்களில் இருந்து ரூ.16 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்து உள்ளது. அதேபோல் கேரளாவிலும் சக்கைப்போடு போடும் இப்படம் நான்கு நாட்களில் ரூ.8 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. மேலும் கர்நாடகாவிலும் இப்படம் 10 கோடிக்கு மேல் வசூலை வாரிசுருட்டி இருக்கிறது. இதனால் கருப்பு படம் பான் இந்தியா ஹிட்டை நோக்கி நகர்ந்து வருகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories