சந்திரலேகாவுடன் சபதம் எடுத்துக் கொண்ட கார்த்திக் ராஜா
சீரியல்களின் மீதான ஆர்வம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சன் டிவி, விஜய் டிவி, ஜீ5 டிவி போன்ற சேனல்களில் பல சீரியல்கள் ஒளிபரப்பாகின்றன. கார்த்திகை தீபம் சீரியல் முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாம் பாகம் ஒளிபரப்பாகிறது.
பொதுவாக, சீரியல்களில் இரண்டாம் பாகம் என்றால் சிறிய மாற்றங்களுடன் கதை தொடரும். கார்த்திகை தீபம் 2-ம் பாகத்தில் கார்த்திக் டிரைவராகவும், வீட்டு மாப்பிள்ளையாகவும் இருக்கிறார்.
24
சந்திரலேகாவுடன் சபதம் எடுத்துக் கொண்ட கார்த்திக் ராஜா
கார்த்திகை தீபம் 2 சீரியலில் கார்த்திக் டிரைவராகக் காட்டப்படுகிறார். நேற்றைய பகுதியில், சிவனாண்டி நவீன் மற்றும் துர்காவை கோவிலில் அடைத்து வைக்க, கார்த்திக் அவர்களைக் காப்பாற்றுகிறார். இன்றைய பகுதியில் என்ன நடக்கிறது என்பதைப் பார்ப்போம்.
34
புதிய பிளான் போட்ட கார்த்திக்
கோவிலில் அடைக்கப்பட்டிருந்த துர்கா, நவீனை கார்த்திக் காப்பாற்றுகிறார். ரேவதி துர்காவிடம் கோபப்பட்டு, நவீனுடன் நிச்சயதார்த்தம் நடக்கும் என்கிறார். கார்த்திக் அத்தை தேர்தலில் நிற்பதால், கார்த்திக் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்துகிறார். சிவனாண்டி நவீனைக் கடத்தத் திட்டமிடுகிறார்.
44
துர்காவிற்கும் நவீனுக்கும் எப்போது கல்யாணம்
சிவனாண்டிக்கு முன்பாகவே கார்த்திக் நவீனைக் காப்பாற்றுகிறார். துர்காவுக்குத் தான்தான் நிச்சயம் நடக்கும் என்று சந்திரகலாவிடம் சவால் விடுகிறார். சவாலில் ஜெயித்தால், சந்திரகலா சிவனாண்டியுடன் செல்ல வேண்டும் என்றும், தோற்றால், தான் ராஜா சேதுபதியின் பேரன் என்பதை சாமுண்டீஸ்வரியிடம் சொல்ல வேண்டும் என்றும் கார்த்திக் கூறுகிறார்.