ஒரு வார இடைவெளிக்கு பிறகு புதிய தேதி அறிவிப்பு: ரஜினியின் பிறந்தநாளில் திரைக்கு வரும் வா வாத்தியார்!

Published : Dec 03, 2025, 12:28 PM IST

Vaa Vaathiyaar New Release Date : கார்த்தி நடிப்பில் உருவாகியிருக்கும் வா வாத்தியார் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்ட நிலையில் இப்போது புதிய தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

PREV
14
கார்த்தியின் வா வாத்தியார்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் கார்த்தி. சமீப காலமாக இவரது நடிப்பில் வரும் எந்தப் படமும் பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இந்த நிலையில் தான் இப்போது வா வாத்தியார் படம் திரைக்கு வர இருக்கிறது. இயக்குநர் நளன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி, கீர்த்தி ஷெட்டி, சத்யராஜ், ஆனந்தராஜ், ராஜ்கிரண், ஷில்பா மஞ்சுநாத், கருணாகரன் ஆகியோர் பலர் நடிப்பில் இந்த படம் உருவாகியிருக்கிறது.

24
டிசம்பர் 5லிருந்து பின் வாங்கிய வா வாத்தியார்

இப்படத்தில் கார்த்தி போலீஸ் வேடத்தில் நடித்துள்ளார். 'சூது கவ்வும்' என்ற வெற்றிப் படத்தின் மூலம் பிரபலமான நலன் குமாரசாமி இப்படத்தை இயக்கி உள்ளார். ஸ்டுடியோ கிரீன் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா இப்படத்தை தயாரித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

34
வா வாத்தியார் ரிலீஸ் தேதி

முழுக்க முழுக்க ஆக்‌ஷன் காமெடி கதையை மையப்படுத்தி இந்தப் படம் உருவாகியிருகிறது. 8 ஆண்டு இடைவெளிக்கு பிறகு நளன் குமாரசாமி இயக்கத்தில் இந்தப் படம் வெளியாக இருக்கிறது. 90களில் வெளியான அனைத்து மசாலா படங்களுக்கும் மரியாதை செலுத்தும் விதமாக தனது படம் இருக்கும் என்று இயக்குனர் கூறியிருந்தார். அதே சமயம், 'வா வாத்தியார்' படத்தின் ஓடிடி உரிமம் விற்கப்பட்டுள்ளது. அமேசான் பிரைம் வீடியோ இதன் ஸ்ட்ரீமிங் உரிமையைப் பெற்றுள்ளது. இப்படத்தில் கார்த்தி தீவிர எம்.ஜி.ஆர் ரசிகராக வருகிறார். விமர்சகர்களின் பாராட்டுகளைப் பெற்ற மெய்யழகன் படத்திற்குப் பிறகு கார்த்தி கதாநாயகனாக நடித்துள்ள படம்தான் வா வாத்தியார்.

44
ரஜினியின் பிறந்தநாளில் வா வாத்தியார் ரிலீஸ்

ஏற்கனவே இந்தப் படம் டிசம்பர் 5ஆம் தேதி வெளியாக இருந்த நிலையில் இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது. அதன்படி இந்தப் படத்தின் புதிய ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். அதன்படி வரும் 12 ஆம் தேதி ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு இந்தப் படம் திரைக்கு வருகிறது. இந்த ஆண்டு கார்த்தி நடிப்பில் ரிலீஸ் ஆக உள்ள ஒரே படம் வா வாத்தியார் என்பது குறிப்பிடத்தக்கது. வா வாத்தியார் திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமையை ஜீ தமிழ் தொலைக்காட்சி கைப்பற்றி உள்ளது.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories