Akhanda 2 Movie First Review : நந்தமுரி பாலகிருஷ்ணா நடிப்பில் உருவாகியிருக்கும் அகாண்டா 2 வரும் 5ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் படத்தைப் பற்றிய முதல் விமர்சனம் வெளியாகியுள்ளது.
இயக்குநர் போயபதி ஸ்ரீனு இயக்கத்தில் நந்தமுரி பாலகிருஷ்ணா நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் அகாண்டா 2. முழுக்க முழுக்க ஃபேண்டஸி ஆக்ஷன் டிராமா கதையை மையப்படுத்திய இந்தப் படத்தில் பாலகிருஷ்ணா அகாண்டா ருத்ர சிக்கந்தர் அகோரா மற்றும் முரளி கிருஷ்ணா என்று இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். மேலும், சம்யுக்தா, ரவி மரியா, பூர்ணா, சாய் குமார், கபீர் துகான் சிங், ரோன்சன் வின்சர்ட், ஆதி பினிஷெட்டி ஆகியோர் பலர் நடித்துள்ளனர்.
24
'அகண்டா 2' சென்சார் அறிக்கை
அகாண்டா 2: தாண்டவம் வரும் டிசம்பர் 5ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்தப் படத்தின் முதல் விமர்சனம் வெளியாகியுள்ளது. அதைப் பற்றி இந்த தொகுப்பில் முழுவதுமாக பார்க்கலாம். இந்தப் படம் பான்-இந்திய திரைப்படமாக தமிழ், மலையாளம், கன்னடம், இந்தியில் வெளியாகிறது.
34
'அகண்டா 2' முதல் விமர்சனம்
'அகண்டா 2' சென்சார் செய்யப்பட்டு, U/A சான்றிதழ் பெற்றுள்ளது. படத்தின் நீளம் 2 மணி 44 நிமிடங்கள். சென்சார் டாக் பாசிட்டிவாக உள்ளது. படத்திற்கு டிக்கெட் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. 'அகண்டா 2' படத்தின் முதல் அறிக்கை வந்துவிட்டது. பாலகிருஷ்ணாவின் அகோரா என்ட்ரி சிறப்பாக உள்ளதாம். இடைவேளை, கிளைமாக்ஸ் காட்சிகள் தெறிக்கவிடும் என கூறப்படுகிறது. இதுவே படத்தின் முக்கிய ஹைலைட்.
44
'அகண்டா 2' படத்தின் ஹைலைட்ஸ்
படத்தில் ஆக்ஷன் காட்சிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. பாலகிருஷ்ணாவின் மாஸ் வசனங்கள் ரசிகர்களை கவரும். தாய் மற்றும் மகள் சென்டிமென்ட் காட்சிகளும் சிறப்பாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்து தர்மம் பற்றிய நீளமான உரைகள் சற்று ஓவர் டோஸாக இருக்கலாம். சில லாஜிக் இல்லாத காட்சிகள் உள்ளன. ஆனால், பாலகிருஷ்ணா தனது விஸ்வரூப நடிப்பால் படத்தை தாங்குகிறார் என கூறப்படுகிறது.