நடிகை சமந்தா, இயக்குநர் ராஜ் நிடிமோருவை காதலித்து திருமணம் செய்துள்ளார். இவரைப் போலவே நயன்தாரா, ரோஜா என இயக்குநர்களை மணந்த தென்னிந்தியாவின் முன்னணி நடிகைகள் வேறு யார் யார் என்பதை பற்றி பார்க்கலாம்.
தற்போது தென்னிந்திய திரையுலகில் சமந்தா - ராஜ் நிடிமோரு திருமணம் ஹாட் டாப்பிக்காக உள்ளது. முன்னணி நடிகையான சமந்தா, வெற்றிகரமான இயக்குநர் ராஜை இரண்டாவது திருமணம் செய்துகொண்டுள்ளார். இவர்களின் திருமணம் கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் வைத்து நடைபெற்றது. எளிமையாக நடைபெற்ற இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.
26
நயன்தாரா - விக்னேஷ் சிவன்
திரையுலகில் இயக்குநர்களை மணந்த நடிகைகள் பலர். அவர்களில் நயன்தாராவும் ஒருவர். விக்னேஷ் சிவனுடன் 5 ஆண்டுகள் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்த நயன்தாரா, அவரை திருமணம் செய்து கொண்டனர். இந்த ஜோடிக்கு உயிர், உலகு என இரட்டை ஆண் குழந்தைகளும் உள்ளனர்.
36
ரம்யா கிருஷ்ணன் - கிருஷ்ண வம்சி
பாகுபலி படத்தில் ராஜமாதா சிவகாமி தேவியாக நடித்து புகழ்பெற்ற நடிகை ரம்யா கிருஷ்ணனும், இயக்குநரை தான் மணந்திருக்கிறார். இவரது கணவர் கிருஷ்ண வம்சி தெலுங்கில் இயக்குநராக பணியாற்றி உள்ளார். இவர்கள் கூட்டணியில் வந்த 'சந்திரலேகா' சூப்பர் ஹிட் ஆனது. அப்போதுதான் காதல் மலர்ந்தது.
90களில் தமிழ், தெலுங்கு திரையுலகை ஆண்டவர் ரோஜா. பிசியாக இருந்தபோதே, தமிழ் திரைப்பட இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரான செல்வமணியை காதலித்து வந்தார் ரோஜா. இதையடுத்து பெற்றோர் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.
56
சுஹாசினி - மணிரத்னம்
தமிழ், தெலுங்கில் பிசியான நடிகையாக ஆக வலம் வந்தவர் சுஹாசினி. நாட்டின் பெருமைமிக்க இயக்குநர்களில் ஒருவரான மணிரத்னத்தை காதலித்து மணந்தார். 80, 90களில் முன்னணி நடிகையாக இருந்த சுஹாசினி திருமணத்துக்கு பின்னர் நடிப்புக்கு முழுக்கு போட்டார். இவர்களுக்கு நந்தன் என்கிற மகன் இருக்கிறார்.
66
குஷ்பு - சுந்தர்
இயக்குநரை மணந்த மற்றொரு முன்னணி நடிகை குஷ்பு. தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்தபோதே, இயக்குநர் சுந்தர்.சியை காதலித்து திருமணம் செய்துகொண்டார் குஷ்பு. இவர்களுக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள்.