Ponniyin Selvan dubbing : பொன்னியின் செல்வனுக்காக முக்கிய கடமையை முடித்த முன்னணி நடிகர்கள்..யார் தெரியுமா?

Kanmani P   | Asianet News
Published : Dec 26, 2021, 02:46 PM IST

dubbing for Ponniyin Selvan : பொன்னியின் செல்வன் படத்திற்கான டப்பிங்கை நடிகர் கார்த்தியும், ஜெயம் ரவியும் பேசி முடித்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.

PREV
19
Ponniyin  Selvan  dubbing : பொன்னியின் செல்வனுக்காக முக்கிய கடமையை முடித்த முன்னணி நடிகர்கள்..யார் தெரியுமா?
PonniyinSelvan

Ponniyin Selvan : தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குநராக வலம் வரும் மணிரத்னத்தின் கனவு படமான பொன்னியின் செல்வன் திரைப்படம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராகி உள்ளது.

29
Ponniyin Selvan

Ponniyin Selvan : இதில் விக்ரம், ஜெயராம்,  சரத்குமார், பார்த்திபன், பிரபு, லால், ரியாஸ் கான், விக்ரம் பிரபு, ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

39
Ponniyin Selvan

Ponniyin Selvan : டெக்னிக்கல் சைடிலும் இசைக்கு ஏ.ஆர்.ரகுமான், ஒளிப்பதிவிற்கு ரவிவர்மன், கலைக்கு தோட்டாதரணி என மிகப்பெரிய ஜாம்பாவன்கள் டீம் பணியாற்றியுள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. 

49
Ponniyin Selvan

Ponniyin Selvan : இப்படம் இரண்டு பாகமாக உருவாகி உள்ளது. இரண்டு பாகங்களின் படப்பிடிப்பும் முழுமையாக நிறைவடைந்து விட்டது. தற்போது பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

59
Ponniyin Selvan

Ponniyin Selvan : பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகத்தில் 6 பாடல்களும், 2-ம் பாகத்தில் 6 பாடல்களுமாக மொத்தம் 12 பாடல்கள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் முதல் பாகம் அடுத்தாண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.

69
Ponniyin Selvan

Ponniyin Selvan : பொன்னியின் செல்வன் படம் அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் 28-ந் திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. மேலும் அன்றைய தினம் எந்தவித போட்டியுமின்றி இப்படம் இந்தியா முழுவதும் பிரம்மாண்டமாக வெளியிடப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

79
Ponniyin Selvan

Ponniyin Selvan : பிரமாண்ட பொருட்செலவில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் வெளியீடு குறித்து  விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

89
PonniyinSelvan

PonniyinSelvan : இந்த படத்தில் நடிகர்கள் சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, த்ரிஷா, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, கிஷோர், ஜெயராம், லால், ரஹ்மான், அஸ்வின் ஆகியோர் நடிக்கிறார்கள். சமீபத்தில் படத்தின் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. 

99
PonniyinSelvan

PonniyinSelvan : வித்யா சுப்ரமணியன் இந்த படத்திற்கான டப்பிங் பேசும் பணிகளை முதன் முதலாக தொடங்கினார். பின் நடிகை த்ரிஷா டப்பிங் பேசி முடித்தார். இந்நிலையில் நடிகர் கார்த்தியும், ஜெயம் ரவியும் டப்பிங் பேசி முடித்துள்ளனர் என நம்பத்தகுந்த தகவல்கள் கிடைத்துள்ளன. 

Read more Photos on
click me!

Recommended Stories