சூர்யாவின் வாடிவாசலுக்கு போட்டியாக.. ஜல்லிக்கட்டு டைட்டில் உடன் களமிறங்கும் கார்த்தி - இயக்குனர் யார் தெரியுமா

Published : Jan 19, 2023, 03:07 PM IST

பொன்னியின் செல்வன் 2, ஜப்பான் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ள நடிகர் கார்த்தி, அடுத்ததாக ஜல்லிக்கட்டு என்கிற படத்தில் நடிக்க உள்ளாராம்.

PREV
14
சூர்யாவின் வாடிவாசலுக்கு போட்டியாக.. ஜல்லிக்கட்டு டைட்டில் உடன் களமிறங்கும் கார்த்தி - இயக்குனர் யார் தெரியுமா

நடிகர் கார்த்திக்கு 2022-ம் ஆண்டு மிகவும் சக்சஸ்புல்லான ஆண்டாக அமைந்தது. கடந்தாண்டு இவர் நடிப்பில் வெளியான விருமன், பொன்னியின் செல்வன் மற்றும் சர்தார் ஆகிய மூன்று படங்களும் பிளாக்பஸ்டர் ஹிட் ஆகின. இதில் பொன்னியின் செல்வன் ரூ.500 கோடிக்கு மேலும், சர்தார் ரூ.100 கோடிக்கு மேலும் வசூல் ஈட்டி பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்தன.

24

இந்த வருடம் அவர் நடிப்பில் முதலாவதாக ரிலீஸ் ஆக உள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன் 2-ம் பாகம். இப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 28-ந் தேதி ரிலீசாக உள்ளது. இதன் ரிலீசுக்கு இன்னும் 100 நாட்களே எஞ்சி உள்ளது. இதற்கு அடுத்தபடியாக ராஜு முருகன் இயக்கும் ஜப்பான் திரைப்படத்தில் நடித்து வருகிறார் கார்த்தி. இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதையும் படியுங்கள்... தங்க நிற உடையில்... கண்ணை கட்டும் கவர்ச்சியில் ஹாட் போஸ் கொடுத்த ஜான்வி கபூர்! அதிரி புதிரி போட்டோஸ்!

34

இந்நிலையில், கார்த்தி அடுத்ததாக நடிக்க உள்ள படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி அவரின் அடுத்தபடத்தை இயக்குனர் பிரேம் குமார் இயக்க உள்ளாராம். இவர் தமிழில் விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன 96 படத்தை இயக்கியவர் ஆவார். அப்படத்துக்கு பின் அதன் தெலுங்கு ரீமேக்கை இயக்கிய பிரேம் குமார் தற்போது நடிகர் கார்த்தி உடன் முதன்முறையாக கூட்டணி அமைத்துள்ளார்.

44

கார்த்தி- பிரேம் குமார் கூட்டணியில் உருவாக உள்ள படத்துக்கு ஜல்லிக்கட்டு என பெயரிடப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே கார்த்தியின் அண்ணன் சூர்யா, வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் எனும் ஜல்லிக்கட்டு சம்பந்தமான கதையில் நடிக்க கமிட் ஆகி உள்ளார். இந்த நிலையில், கார்த்தி ஜல்லிக்கட்டு என்கிற தலைப்புடன் களமிறங்கி உள்ளதால், இப்படத்திற்கும் எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது.

இதையும் படியுங்கள்... விமான நிலையத்தில் பரிசோதனை செய்வதிலும் மத பாகுபாடு... இதெல்லாம் எவ்ளோ கேவலம் தெரியுமா? - சனம் ஷெட்டி கோபம்

Read more Photos on
click me!

Recommended Stories