சமீப காலமாக கன்னட திரையுலகில் வெளியாகும் படங்களுக்கு அனைத்து மொழி, ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் கடந்த அக்டோபர் மாதம் வெளியான, 'காந்தாரா' திரைப்படம், ஒரு மாதத்தை கடந்தும், ரசிகர்களால் கொண்டாடப்படும் படங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. இந்த படத்தை கே.ஜி.எஃப் திரைப்படத்தை தயாரித்த ஹோம்பெல் நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்த படத்தை இயக்குனரும், நடிகருமான, ரிஷப்ஷட்டி இயக்கி நடித்துள்ளார். மேலும் சப்தமி கவுடா, கிஷோர் போன்ற பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். கடந்த அக்டோபர் மாதம் வெளியான இந்த திரைப்படம், கன்னட மொழி ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்ற நிலையில்... தமிழ் தெலுங்கு, மலையாளம், போன்ற மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியாகி பாராட்டைகளையும் குவித்தது.
Ajith Statement: நடிகர் அஜித்தின் திடீர் அறிக்கை..! பின்னணி இதுவா..? வெளியான தகவல்!
இந்த படத்தின் கதை படி... கதைப்படி அளவுக்கு அதிகமான சொத்துடன் இருக்கும் பண்ணையார் ஒருவர் நிம்மதி இல்லாமல் தவிக்கிறார். அப்போது மலை கிராமத்திற்கு செல்லும் அவர் அங்கு அம்மக்கள் ஒரு கடவுளை வழிபடுவதை பார்க்கிறார். அந்தக் கடவுள் மூலம் தனக்கு நல்லது நடக்கும் என்று நம்பும் பண்ணையார் மக்களிடம் சில நிலங்களை கொடுத்து அந்த கடவுளை வாங்குகிறார். அதன் பிறகு அவருடைய வாரிசுகள் இந்த நிலம் குறித்த தகவலை கேள்வி பட்டு, மலை கிராம மக்களிடம் அதை அபகரிக்க முயல்கிறார்கள்.
அளவான பின்னணி இசையும், அதிரடி சண்டை காட்சிகளும் பார்ப்பவர்களை பரசவப்படுத்தும். செண்டிமெண்ட், ரொமான்ஸ் போன்ற அனைத்து காட்சிகளிலும் தேவையான அளவு நடிப்பை எதார்த்தமாக கொடுத்துள்ளார். மேலும் பழங்குடி மக்களின் வாழ்க்கை முறையும், அவர்களின் வேட்டை தொழில் போன்றவற்றை இதுவரை யாரும் சொல்லாத அளவிற்கு சுவாரஸ்யமாக கூறியுள்ளார் இதுவே இந்த படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு காரணம் என கூறலாம்.
சமீபத்தில், இந்த படத்தை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்... இயக்குனர் ரிஷப் ஷெட்டியை தன்னுனடய வீட்டிற்கு அழைத்து அவரை கௌரவ படுத்தியதோடு, தங்க சங்கிலி ஒன்றையும் பரிசாக கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் 'காந்தாரா' திரைக்கு வந்து ஒரு மாதம் ஆக போகும் நிலையில், இந்த படத்தின்... ஓடிடி ரிலீஸ் குறித்த அதிகார பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் இப்படம், நவம்பர் 24 நான்காம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Tamannaah Bhatia: பிஸ்னஸ் மேன் கணவரை அறிமுகம் செய்து வைத்த தமன்னா..! பார்த்துட்டது ஷாக் ஆகிடாதீங்க?