திரையுலகில் நடிகர், நடிகைகள் தனக்கென தனி இடத்தை பிடித்த பின்னர்... பொழுது போக்குக்காக தனியாக பண்ணை வீடு வைத்திருப்பதை தங்களது கௌரவமாகவே நினைகிறார்கள். ஆரம்பத்தில் மரங்களை நடுதல் மற்றும் விலங்கு-பறவைகளை இனப்பெருக்கம் செய்வதற்காக சிலர் பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால் ஒரு சில சில சமூக விரோத விஷயங்களுக்காக பயன் படுத்தி வருவதாக குற்றச்சாட்டுகள் நீண்டு கொண்டே செல்கிறது. தற்போது பிரபல கன்னட நடிகர் நாக சவுரியா பண்ணை வீட்டில் சூதாட்டம் நடந்ததாக கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2011ஆம் ஆண்டு தெலுங்கு சினிமாவில் அறிமுகமானவர் நாக சௌர்யா. சந்தமாமா காதலு, ராஷ்மிகா மந்தனாவுடன் சோலி, சமந்தா பிரபு நடித்த ஓ பேபி போன்ற படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்புதான் ‘வரடு காவலனு’ என்கிற படம் வெளியானது. மேலும் அடுத்தடுத்து இன்னும் நான்கு படங்களில் நடித்து வருகிறார். திரையுலகில் இளம் நடிகராக நன்கு வளர்ந்து வரும் நிலையில் திடீர் என இப்படி பட்ட சர்ச்சையில் இவர் சிக்கியுள்ளது கன்னட திரையுலகில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
நாக சௌர்யாவுக்கு சொந்தமாக ஹைதராபாத்தில் உள்ள பண்ணை வீட்டில் தேவையற்ற செயல்கள், முறைகேடுகள் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து திடீர் என போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்ட போது, சூதாட்டத்தில் ஈடுபட்ட சுமார் 30 பேர் கைது செய்யப்பட்டனர், அவர்களிடம் இருந்து ஏராளமான பணம், மொபைல் போன், பணம் எண்ணும் இயந்திரம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பண்ணை வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் சிக்கியவர்களில் சுமன் குட்டா என்ற பிரபல தொழிலதிபரும் சில நடிகர்களும் உள்ளனர். அனைவரும் சேர்ந்து போக்கர் விளையாடியதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த சோதனையின் போது, 67 லட்சம் ரொக்கம், 33 மொபைல் போன்கள், 3 கார்கள், இரண்டு சூதாட்ட இயந்திரங்கள் மற்றும் சில கேஷ் கவுன்டர்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தெலுங்கு தயாரிப்பாளர் சுனில் சவுத்ரியையும் போலீசார் கைது செய்தனர். நான் சூதாட்டம் விளையாடவில்லை. நட்புரீதியான மூன்று அட்டைகளை (3-அட்டை) விளையாடுகிறேன். அவர்கள் கோவாவில் சூதாட்ட விடுதிகள் வைத்திருப்பதாகவும், தீபாவளியின் போது நண்பர்களுடன் விளையாடியதாகவும் அவர் போலீசாரிடம் தெரிவித்தார். தொழிலதிபர் சுமன் குட்டாவும், நாக சௌர்யாவும் ஒரே பண்ணை வீட்டில் சில குடியிருப்புகள் மற்றும் ரியல் எஸ்டேட் நடத்தி வருவதாக கூறப்படுகிறது. சுமன் கைது செய்யப்பட்டதையடுத்து, அவர் மீதான மோசடி வழக்குகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. சில NRI களும் அவர் மீது புகார் அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.