'சந்திரமுகி 2' படத்தில் ஜோதிகா இடத்தை தட்டி தூக்கிய கங்கனா ரணாவத்! வெளியானது அதிகார பூர்வ அறிவிப்பு!

First Published | Dec 10, 2022, 8:20 PM IST

நடிகர் லாரன்ஸ் நடித்துவரும் 'சந்திரமுகி 2' படத்தில் நடிகை கங்கனா ரணாவத் நடிக்க உள்ள தகவலை, லைகா நிறுவனம் உறுதி செய்துள்ளது.
 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குனர் பி.வாசு இயக்கத்தில், கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியாகி 200 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடி பிளாக் பஸ்டர் ஹிட்டடித்த திரைப்படம் சந்திரமுகி. இந்த படத்தில், சந்திரமுகி என்கிற கதாபாத்திரத்தில் நடிகை ஜோதிகா நடித்திருந்தார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபு, நாசர், வடிவேலு, வினித், மாளவிகா, போன்ற பலர் நடித்திருந்தனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்திருந்தார். மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்த இந்தத் திரைப்படத்தின், இரண்டாவது பாகத்தை எடுக்க இயக்குனர் பி வாசு முடிவு செய்த நிலையில், முதலில் ரஜினிகாந்தையே இந்த படத்தில் ஹீரோவாக வைத்து இயக்க திட்டமிட்டதாக கூறப்பட்டது. பின்னர் ரஜினிகாந்த் இந்த படத்தின் ஸ்கிரிப்டில் ஒரு சில மாறுதல்களை கூறியதாகவும், அதன் பின்னர் படத்தில் நடிக்க மறுத்துவிட்டதாக கூறப்பட்டது.

Tap to resize

எனவே பி.வாசு... 'சந்தரமுகி 2' படத்தில் நடிகர் லாரன்ஸை கதாநாயகனாக நடிக்க வைக்க முடிவு செய்தார். இந்த படத்தின் இரண்டாம் பாகம் சுமார் 17 வருடங்களுக்கு பின் மீண்டும் உயிர் பெற உள்ள நிலையில், இப்படத்தில் லாரன்ஸ் இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளதாகவும், மேலும் வடிவேலு ராதிகா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் கூறப்பட்டது.

ஏற்கனவே இந்த படத்தில் நடிகை மஹிமா நம்பியார்,  லட்சுமிமேனன், போன்ற நடிகைகள் நடிக்க உள்ள தகவல் வெளியான நிலையில், தற்போது இந்த படத்தில் பிரபல பாலிவுட் நடிகை இணைந்துள்ள தகவலை அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது. 'சந்திரமுகி 2' படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா.

அந்த வகையில் தற்போது நடிகை கங்கனா ரணாவத் நடிக்க உள்ள தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இதுகுறித்து வெளியான தகவலின்படி, இயக்குனர் பி.வாசுவிடம் தானாகவே முன்வந்து சந்திரமுகி 2 படத்தில் நடிக்கும் வாய்ப்பை அவர் பெற்றதாக கூறப்பட்டது. எது எப்படி இருந்தாலும், ஜோதிகாவை போல்... கங்கானாவும் ரசிகர்கள் மனதில் இடம் பிடிப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Latest Videos

click me!