பிக்பாஸ் வீட்டுக்குள் வைல்டு கார்டு எண்ட்ரி கொடுக்கும் கம்முவின் முன்னாள் காதலி? காத்திருக்கும் சம்பவம்!

Published : Oct 28, 2025, 06:21 PM IST

Kamarudin Ex Girlfriend Set for Bigg Boss Wild Card Entry: பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் பிரபல சீரியல் நடிகை வைல்டு கார்டு எண்ட்ரியாக உள்ளே செல்வது உறுதியாகி உள்ளது.

PREV
15
பிக்பாஸ் தமிழ் சீசன் 9:

பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி அக்டோபர் மாதம் 5-ஆம் தேதி துவங்கப்பட்ட நிலையில், வெற்றிகரமாக 25 நாட்களை எட்ட உள்ளது. 20 போட்டியாளர்கள் முதல் நாளே பிக்பாஸ் வீட்டுக்குள் சென்ற நிலையில், இவர்களில் இருந்து தற்போது வரை பிரவீன் காந்தி, அபிசாரா, மற்றும் ஆதிரை ஆகிய மூன்று பேர் மக்களின் வாக்குகள் அடிப்படையிலும், ஆர் ஜே நந்தினி தானாக முன்வந்து பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி உள்ளனர்.

25
சண்டை மட்டுமே ஸ்டேடர்ஜி:

இதுவரை போட்டியாளர்கள் அனைவருமே சண்டை போடுவதை மட்டுமே ஸ்டேடர்ஜியாக கையாண்டு வருகிறார்கள். காதல் கன்டென்ட் கொடுக்க முயற்சிப்பவர்களுக்கும் அது பலனளிக்கவில்லை. அதே போல் வீட்டில் உள்ள அனைவருமே தங்களின் சுயரூபத்தை காட்டவில்லை என்பதே மக்களின் கருத்தாகவும் உள்ளது.

அண்ணா சீரியலில் இருந்து விலகிய முக்கிய நடிகை - நியூ என்ட்ரி யார் தெரியுமா?

35
வைல்டு கார்டு என்ட்ரி:

எனவே உள்ளே இருக்கும் போட்டியாளர்களுக்கு சார்பிரைஸ் கொடுக்கும் விதமாகவும், போட்டியை பரபரப்பாக்கும் திட்டத்துடன் பிக்பாஸ் தற்போது அடுத்தடுத்து சில வைல்டு கார்டு போட்டியாளர்களை உள்ளே இறக்க திட்டமிட்டுள்ளார். அதன்படி, விஜய் டிவியில் ஒளிபரப்பான பாக்கியலட்சுமி, மகாநதி, சன் டிவியில் ஒளிபரப்பான அண்ணம் போன்ற சீரியல்களில் நடித்த திவ்யா கணேஷ் பிக்பாஸ் போட்டியில் கலந்து கொள்வது உறுதியாகி உள்ளது.

45
திவ்யா கணேஷ் புரோமோ:

இதுகுறித்த புரோமோ ஒன்றும் வெளியாகி உள்ளது. இதில் திவ்யா கணேஷ், "ஹாய் நான் தான் திவ்யா கணேஷ் உங்கள் எல்லோருக்குமே என்னை ஜெனியா கண்டிப்பா தெரியும். இந்த முறை பிக்பாஸ் சீசன் 9 வைல்டு கார்டு போட்டியாளரா நான் உள்ளே போறேன். உள்ளே இருக்கும் எல்லோருடைய பேச்சும் ஃபயரா தான் இருக்கு. ஆனால் அவங்க செயல் ஜீரோ. என தன் கருத்தை கூறி... நான் அவர்களை போல் இல்லை. ஸ்ட்ரைட் ஃபார்வோட் மனசில் பட்டத்தை பேசிவிடுவேன் என கூறுகிறார்.

என் கிட்ட அது இல்லையா? வசியை திருமணம் செய்தது குறித்து மனம் திறந்த பிரியங்கா தேஷ்பாண்டே!

55
கம்ருதீன் காதலியா?

இவருடைய வருகை ரசிகர்களுக்கு நிகழ்ச்சி மீதான எதிர்பார்ப்பை தூண்டி இருந்தாலும், ஒரு சந்தேகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. அதாவது, கம்ருதீன் தன்னை பற்றி கூறும் போது மகாநதி சீரியலில் , முன்பு தனக்கு ஜோடியாக நடித்த நடிகையை காதலித்ததாக கூறி இருந்தார். ஒருவேளை அவங்க இவங்க தானா? என்று கமெண்ட் செய்து வருகிறார்கள். திவ்யா உள்ளே சென்றால் கம்மு ரியாக்ஷன் என்ன என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம்.

உன் போதைக்கு நான் ஊறுகாயா? பிக் பாஸ் வீட்டில் கம்ருதீன் செய்யும் லீலைகளை லிஸ்ட் போட்டு சொன்ன பார்வதி..!

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories