இந்த உலகத்தில் எத்தனை உறவுகள் நம்மை சூழ்ந்திருந்தாலும், அன்னை என்கிற ஒரு உறவுக்கு ஈடாகாது.

பசி என்றாலும், பிரச்சனைகள் என்றாலும் முகத்தை பார்த்தே கண்டு பிடித்து, அரவணைத்து ஆறுதல் கூறும் உன்னதமான அன்பு அம்மாவிடம் மட்டுமே வெளிப்படும்.

ஒவ்வொரு மே மாதமும் 2 ஆவது ஞாயிற்று கிழமை அன்றும் அன்னையர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்த ஒரு நாளிலாவது, நமக்காக ஓய்வில்லாமல் உழைத்து கொண்டிருக்கும் அன்னையை, எவ்வளவு வேலை சுமைகள் இருந்தாலும் அனைத்தையும் ஓரம் கட்டி வைத்து விட்டு, இந்த உலகிற்கு நம்மை பூரித்த சந்தோஷத்தில், வலியை பொறுத்து பெற்றெடுத்த தாயை மகிழ்விக்கும் விதமாக பலர் கொண்டாடி வருகின்றனர்.

இந்த நாளை பிரபலங்கள் முதல், பலர் தங்களுடைய அம்மாவை பற்றி, சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொள்வதையும் வழக்கமாக வைத்துள்ளனர்.

அடுத்தடுத்து பல பிரபலங்கள், தங்களுடைய அன்னை புகைப்படத்தை பதிவிட்டு வாழ்த்து கூறி வரும் நிலையில், நடிகர் கமல் ஹாசனின் பதிவு ரசிகர்கள் மத்தியில் மிகவும் கவனம் பெற்றுள்ளது.

தன்னுடைய இளம் வயதில், அம்மாவுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு அன்னையர் தின வாழ்த்துக்களை கூறி, அம்மாவை பற்றிய நினைவுகளை பகிர்ந்து கொண்டுள்ளார் கமல்ஹாசன்.

இந்த பதிவு அவர் கூறியுள்ளதாவது... என் குழையும் மழலையில் துவங்கி இன்று என் நாவில் புழங்கும் தமிழைப்போலவே நீயும், என்னோடு, எப்போதுமே... நானாகிய நதி மூலமே...தாயாகிய ஆதாரமே.. என பதிவிட்டுள்ளார்.