தெலுங்கு, இந்தி, தமிழ் போன்ற மொழிகளில் எண்ணற்ற வெற்றிப்படங்களை கொடுத்த மூத்த இயக்குனர் கே.விஸ்வநாத் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 92. குறிப்பாக தமிழில் இவர் இயக்கிய சலங்கை ஒலி, சிப்பிக்குள் முத்து ஆகிய படங்கள் காலம் கடந்து கொண்டாடப்படுகின்றன. இந்த இரண்டு படங்களிலுமே நாயகனாக நடித்தது கமல்ஹாசன் தான்.