விஜய்யின் வாரிசு படமும், அஜித்தின் துணிவு திரைப்படமும் கடந்த மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 11-ந் தேதி ரிலீஸ் ஆகின. 9 ஆண்டுகளுக்கு பின் இருவரிம் படங்களும் ஒரே நாளில் ரிலீஸ் ஆனதால், இரண்டு படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்தது. அதனை பூர்த்தி செய்யும் வகையில் இரண்டு படங்களுமே அமைந்து இருந்தன.
குறிப்பாக துணிவு திரைப்படம் ஆக்ஷன் விருந்தாகவும், வாரிசு திரைப்படம் பேமிலி ஆடியன்ஸை கவரும் வகையில் இருந்த காரணத்தால், இரண்டு படங்களுக்குமே ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது. வசூலைப் பொறுத்தவரை விஜய் படம் ரூ.300 கோடி வசூலை வாரிக்குவித்து உள்ளது. அதேபோல் அஜித் படம் ரூ.200 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.
இதையும் படியுங்கள்... வாரிசு படத்தின் ஜிமிக்கி ஜிமிக்கி ஜிமிக்கி பொண்ணு பாடல் வீடியோ வெளியீடு!
கடந்த மூன்று வாரங்களாக திரையரங்குகளில் ஆதிக்கம் செலுத்தி வந்த துணிவு மற்றும் வாரிசு படங்களின் ஓட்டம் இன்றுடன் முடிவுக்கு வருகிறது. ஏனெனில் இந்த வாரம் மைக்கேல், பொம்மை நாயகி, ரன் பேபி ரன் என தமிழில் மட்டும் மொத்தம் 7 புதுப்படங்கள் ரிலீஸ் ஆவதால், துணிவு மற்றும் வாரிசு படங்களுக்கான தியேட்டர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு உள்ளன.
தியேட்டர்களின் போட்டி போட்டு ரிலீஸ் ஆன துணிவு, வாரிசு திரைப்படங்கள் ஓடிடி ரிலீஸில் மோதலை தவிர்த்துள்ளன. அதன்படி முதலாவதாக அஜித்தின் துணிவு படம் தான் ஓடிடி-யில் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படம் வருகிற பிப்ரவரி 8-ந் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ரிலீஸாக உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.