பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி ஸ்ரீராம் இயக்குனராக அவதாரம் எடுத்து உருவாக்கிய திரைப்படங்களில் ஒன்று தான், கடந்த 1995 ஆம் ஆண்டு உலக நாயகன் கமல்ஹாசன் மற்றும் அர்ஜுன் நடிப்பில் வெளியான "குருதிப்புனல்" என்கின்ற திரைப்படம். இந்த திரைப்படத்தில் பாடல்களே கிடையாது என்பது நாம் அனைவரும் அறிந்ததே.
ஆனால் இந்திய சினிமா அளவில் முதல் முறையாக "டால்பி ஸ்டீரியோ சரவுண்டட்" (DSS) என்கின்ற புதிய ஒலி அமைப்பை பயன்படுத்தி, வித்தியாசமான ஒரு முயற்சியை எடுத்திருப்பார் கமல்ஹாசன். அது மட்டுமல்ல, கடந்த 1992 ஆம் ஆண்டு உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான "தேவர் மகன்" என்கின்ற திரைப்படத்தில் தான், இந்திய சினிமா வரலாற்றிலேயே முதல் முறையாக திரைக்கதை எழுதுவதற்கு கணினி மூலம் மென்பொருள் ஒன்று பயன்படுத்தப்பட்டது. அதற்கு முன்னதாக அப்படி ஒரு முயற்சியை எந்த திரைப்படத்திலும் யாருமே மேற்கொண்டதில்லை.