SK 26 பட டைட்டில் லீக்கானது... தமிழ் கடவுள் பெயரை தட்டிதூக்கிய சிவகார்த்திகேயன்..!

Published : Feb 16, 2026, 01:02 PM IST

'அமரன்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் புதிய சாதனை படைத்த நடிகர் சிவகார்த்திகேயன், மீண்டும் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் பேனரில் புதிய திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.

PREV
14
SK 26 Movie Title

மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை கதையை திரையில் கொண்டு வந்த படம் 'அமரன்', அதில் முகுந்த் வரதராஜன் கேரக்டரில் சிவகார்த்திகேயன் நடித்திருந்தார். அப்படம், எஸ்.கே.வின் திரைவாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. இப்படம் ரூ.300 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டி சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது. அமரன் படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தான் தயாரித்து இருந்தது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கி இருந்த அமரன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்திருந்தார்.

24
SK 26 பட அறிவிப்பு

இந்நிலையில், சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள 26வது படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு தொடர்பான அறிவிப்பு நேற்று வெளியாகியுள்ளது. சிவகார்த்திகேயன் - கமல்ஹாசன் கூட்டணியின் இரண்டாவது படம் என்பதால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஏற்கனவே உச்சத்தில் உள்ளது. இப்படத்தை குறுகிய காலத்தில் எடுத்து முடிக்க திட்டமிட்டு உள்ளனர்.

34
SK 26 படத்தின் இயக்குநர் யார்?

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் தாய்கிழவி படத்தின் இயக்குனர் சிவக்குமார் முருகேசன் தான் இப்படத்தை இயக்க உள்ளாராம். இவர் ஏற்கனவே கடைசி விவசாயி படத்தில் வேலை செய்தவர். கடந்த ஆண்டு பம்பர் ஹிட் அடித்த ஆண் பாவம் பொல்லாதது படத்தின் ரைட்டரும் இவர் தான். தாய்கிழவி படத்தின் கதை, அதை படமாக்கிய விதம், படத்தின் அவுட்புட் எல்லாம் பாத்து ரொம்ப பிடிச்சு போய் தான் சிவகார்த்திகேயன் அவரை உடனே புக் செய்திருக்கிறார். இது சிவகார்த்திகேயனை ரசிகர்கள் எவ்வாறு பார்க்க விரும்பினார்களோ அந்த ஜானரில் இருக்கும் என கூறப்படுகிறது.

44
பட டைட்டில் இதுவா?

எஸ்.கே.26 திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று மாலை வெளியாக உள்ள நிலையில், அதற்கு முன்னதாகவே அப்படத்தின் டைட்டில் இணையத்தில் லீக் ஆகி உள்ளது. அதன் அறிவிப்பு போஸ்டரிலேயே கையில் வேல் உடன் நிற்பது போன்ற புகைப்படம் இருக்கும். அதை வைத்து பார்க்கையில் இப்படத்திற்கு தமிழ் கடவுள் முருகனின் பெயர்களில் ஒன்றான சேயோன் என்பது தான் எஸ்.கே,26 படத்தின் டைட்டிலாக இருக்கும் என கூறப்படுகிறது. இப்படத்தில் சிவகார்த்திகேயன் முருக பக்தராக நடிப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories