நகைச்சுவை நடிகர் வடிவேலு ரெட் கார்டு பிரச்சனையில் இருந்து மீண்டு தற்போது சினிமாவில் தன்னுடைய செகண்ட் இன்னிங்ஸை தொடங்கி உள்ளார். அவருக்கு மாமன்னன் திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. மாமன்னன் திரைப்படத்தில் நடிகர் உதயநிதியின் தந்தையாக நடித்திருந்தார் வடிவேலு. இதுவரை ஏராளமான படங்களில் காமெடியனாக கலக்கிய வடிவேலுவை சீரியஸ் ஆன வேடத்தில் நடிக்க வைத்து அதில் வெற்றியும் கண்டிருக்கிறார் மாரி செல்வராஜ்.
வடிவேலு - மாரி செல்வராஜ் மீண்டும் இணைய உள்ள படம் ஒருபக்கம் இருக்க, நடிகர் கமல்ஹாசன் வடிவேலுக்கு ஒரு சூப்பர் அரசியல் ஆஃபர் ஒன்றை கொடுத்துள்ளார். அரசியல் என்றதும் கட்சியில் இணைய அழைக்கவில்லை. தன்னிடம் உள்ள ஒரு சூப்பரான அரசியல் கதையில் வடிவேலுவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம் கமல்ஹாசன். மாமன்னனை போல் இதிலும் வடிவேலுவுக்கு சீரியஸான வேடமாக தான் இருக்கும் என கூறப்படுகிறது.
மாமன்னனுக்கு முன்னரே வடிவேலுவை சீரியஸான வேடத்தில் நடிக்க வைத்து அழகு பார்த்தவர் கமல்ஹாசன். அவரின் தேவர் மகன் படத்தில் வடிவேலுவுக்கு இசக்கி என்கிற கதாபாத்திரத்தை கொடுத்திருந்தார் வடிவேலு. இதில் கிளைமாக்ஸ் காட்சியில் வடிவேலுவின் நடிப்புக்கு வேறலெவலில் பாராட்டுக்கள் கிடைத்தன. தற்போது அதே போன்று ஒரு சூப்பரான கதையுடன் கமல்ஹாசன் கொடுத்துள்ள இந்த ஆஃபரை வடிவேலு ஏற்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இதையும் படியுங்கள்... அட கடவுளே... கார் வாங்கிய 6 மாதத்தில் விபத்தில் சிக்கிய குக் வித் கோமாளி சக்தி! வெளியான அதிர்ச்சி தகவல்!