மனோபாலாவின் ஆரம்பகாலம்:
இன்று தமிழ் ரசிகர்களால் இயக்குனர் நடிகர் தயாரிப்பாளர் என அறியப்படும் மனோ பாலா 1953 ஆம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டம் அருகே உள்ள மருதூரில் பிறந்தவர். சிறுவயதில் இருந்தே திரைப்படத்தின் மீது கொண்ட ஆவதால், பெற்றோர் பேச்சை மீறி... சொந்த ஊரில் இருந்து சென்னைக்கு ஓடிவந்தவர் தான் மனோ பாலா.
மனோ பாலாவுக்கு உதவிய கமல்:
மனோ பாலா துணை இயக்குனராக மாறியதே மிகவும் சுவாரஸ்யமான சம்பவம் தான். வீட்டில், தன்னுடைய பெற்றோரிடம், படிக்கப் போகிறேன் என்று சொல்லிவிட்டு... சென்னைக்கு ஓடி வந்தவர் தான் மனோபாலா. திரையுலகின் மீது உள்ள ஆர்வத்தின் காரணமாக, சென்னை திரையரங்குகளில் வெளியாகும் அனைத்து படங்களையும் எப்படியோ காசு சேர்த்து டிக்கெட் வாங்கி பார்த்து விடுவார். அவருக்கு ஒரு கட்டத்தில் நடிகர் கமலஹாசனை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை கச்சிதமாக பயன்படுத்தி கொண்டார் மனோபாலா.
நெற்றியில் குங்கும பொட்டு... தலையில் ஹேர் பேண்டு! நியூ லுக்கில் மனோபாலாவுக்கு அஞ்சலி செலுத்திய தளபதி விஜய்!
மனோபாலாவுக்கு திரையுலகின் மீது உள்ள ஆர்வத்தை கண்டு, பிரமித்து போனார் கமல்ஹாசன். எனவே மனோபாலாவுக்கு உதவ வேண்டும் என நினைத்த கமலஹாசன், இயக்குனர் பாரதிராஜாவிடம் அவரை அழைத்துச் சென்று, துணை இயக்குனர் வாய்ப்பை பெற்று தந்தார். இதுவே மனோபாலா துணை இயக்குனராக மாறுவதற்கு அடித்தளமிட்டது. பின்னர் தன்னுடைய திறமையாலும், பொறுமையாலும், அடுத்தடுத்த படங்களில் துணை இயக்குனராக பணி புரிந்தது மட்டுமின்றி, இயக்குனர் ஆகவும் மாறினார்.
சினிமா துறையில் சுமார் 48 ஆண்டுகள் பணியாற்றிய இவர், நடிப்பு, தயாரிப்பு, இயக்கத்தை தாண்டி தி லயன் கிங் என்ற படத்தின் தமிழ் பதிப்புக்கு டப்பிங் பேசியுள்ளார். இதுவரை மனோ பாலா 40 படங்களை இயக்கியுள்ளார் மேலும் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் சதுரங்க வேட்டை, பாம்பு சட்டை, உள்ளிட்ட மூன்று படங்களை தயாரித்துள்ளார் அது மட்டும் இன்றி இரண்டு சீரியல்களிலும் மூன்று டிவி தொடர்களையும் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிக்கும் வாய்ப்பு:
மனோபாலா புதிய வார்ப்புகள் படத்தில் தலை காட்டிவிட்டு சென்றாலும். இவருக்கு முழுமையான ஒரு கதாபாத்திரத்தை கொடுத்து நடிக்கும் வாய்ப்பை கொடுத்தார் கே.எஸ்.ரவிக்குமார் தான். விளையாட்டாக மனோபாலாவிடம் நீங்க ஏன் நடிக்க கூடாது என அவர் கேட்க, அதற்க்கு என்ன பதில் சொல்வது என தெரியாமல் நின்றார் மனோ. உடனே தன்னுடைய படத்திலேயே ஒரு கதாபாத்திரத்தை கொடுத்து நடிக்க வைத்தார். பின்னர் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குவிய... ஒரு நிலையில் முழு நேர நடிகராகவும் அவதாரம் எடுத்தார் மனோ பாலா.
மனோ பாலாவுக்கு என்ன பிரச்சனை? மரணத்திற்கான காரணம் தெரியுமா... வெளியான ஷாக்கிங் தகவல்!
மறக்க முடியாத படங்கள்;
மனோபாலா முன்னணி நடிகர்களின் படங்களில் ஒரு சிறு காட்சியில் வந்தாலும், ரசிகர்கள் மத்தியில் சிரிப்பலையை ஒளிரச் செய்து விடுவார். அந்த வகையில் இவர் சிறு கதாபாத்திரத்தில் நடித்தாலும், ஆழமாக இவரின் கதாபாத்திரம் மனதில் பதிந்த திரைப்படங்கள் சில உள்ளது. சேது படத்தில் தமிழ் ஆசிரியராகவும், அந்நியன் படத்தில் டிக்கெட் கண்டக்டர் கதாபாத்திரத்திலும், கஜினி படத்தில் விளம்பர இயக்குனராகவும், அரண்மனை 3 படத்தில் பென்சில் போன்ற கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்.