44 ஆண்டுகளுக்கு பின் ஓடிடியில் ரிலீஸ் ஆகும் கமல்ஹாசனின் எவர்கிரீன் திரைப்படம்!

Published : May 01, 2026, 03:29 PM IST

Moondram Pirai OTT: சுமார் 44 வருடங்களுக்கு பின்னர், கமல்ஹாசன் மற்றும் ஸ்ரீதேவி நடிப்பில் வெளியான 'மூன்றம் பிறை' திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ் ஆக உள்ள தகவல் வெளியாகி உள்ளது.

PREV
15
மூன்றம் பிறை:

1982ஆம் ஆண்டு வெளிவந்த 'மூன்றம் பிறை' திரைப்படம் உணர்வுப்பூர்வமான திரைப்படங்களில் ஒன்றாகும். இந்த திரைப்படம் ரிலீஸ் ஆகி இதுவரை சுமார் 44 வருடங்கள் ஆகும் நிலையில், இப்போது, மே 1 முதல், மூன்றம் பிறை திரைப்படம் Amazon Prime Video தளத்தில் டிஜிட்டல் முறையில் புதுப்பிக்கப்பட்டு ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த படத்தை தற்போதைய தலைமுறையினரும் கொண்டாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

25
இளையராஜா பாடல்கள்:

கமல்ஹாசன் திறமையான நடிப்பை வெளிப்படுத்திய இந்த படத்தை, டி.ஜி. தியாகராஜன் மற்றும் ஜி. சரவணன், ஆகியோர் நிறுவனம் சத்ய ஜோதி பிலிம்ஸ் சார்பில் தயாரித்திருந்தனர். பாலு மகேந்திரா இந்த படத்தை கதை எழுதி, இயக்கி, ஒளிப்பதிவு செய்திருந்தார். இளையராஜா இசையமைத்திருந்தார். குறிப்பாக இந்த படத்தில் இடம்பெற்ற “கண்ணே கலைமானே”, “பொன்மேனி உருகுதே”, “பூங்காற்று புதிதானது” ஆகிய பாடல்கள், தற்போது வரை பல ரசிகர்களால் கொண்டாடப்படும் பாடலாக இருந்து வருகிறது.

35
முதல் தேசிய விருது :

'மூன்றம் பிறை' திரைப்படத்தின் கதை மிகவும் நெகிழ்ச்சியானது. காதல், உறவு, இழப்புகள் மற்றும் மனவெலியை வெளிப்படுத்தும் வகையில் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. கவிதைநயம் மிக்க காட்சியமைப்புகள் மற்றும் உச்சக்கட்டமான நடிப்பு, இப்படத்தை இந்திய சினிமாவின் சிறந்த கலாச்சாரப்படங்களில் ஒன்றாக மாற்றியுள்ளன. குறிப்பாக இந்த படத்திற்காக உலக நாயகன் கமல்ஹாசன்க்கு சிறந்த நடிகருக்கான முதல் தேசிய விருது கிடைத்தது. பாலு மகேந்திரா சிறந்த ஒளிப்பதிவிற்கான தேசிய விருதையும் வென்றார். பிலிம்பேர் தென்னிந்தியாவின் சிறந்த இயக்குநர் விருது, பல தமிழ்நாடு அரசு விருதுகள் மற்றும் பல்வேறு கௌரவங்களையும் இப்படம் பெற்றது.

45
வசூல் சாதனை :

ஸ்ரீதேவி தனது எதார்த்தமான நடிப்பால் மனதை உருக வைத்தார். மேலும் துணை நடிகர்களாக ஒய்.ஜி. மகேந்திரன், சில்க் ஸ்மிதா, பூர்ணம் விஸ்வநாதன், காந்திமதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். படம் ஒரு வருட காலம் திரையரங்குகளில் ஓடி, வசூல் சாதனை படமாகும் வெற்றியை பெற்றது.

55
கமல் - ஸ்ரீதேவி:

இந்த படத்தை தற்போது, ஓடிடியில் மீண்டும் ரிலீஸ் ஆக உள்ளது. ஏற்கனவே இப்படத்தை பார்த்து ரசித்த ரசிகர்கள் மற்றும் புதிய தலைமுறை ரசிகர்களும் கமல் - ஸ்ரீதேவி நடிப்பின் மகத்தான கலைநயத்தை அனுபவிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories