ரஜினி..கமல் கூட்டணி..கட்டாயம் நடக்காது..பளீச் பதிலளித்த உலகநாயகன்..ஏன் தெரியுமா?

Kanmani P   | Asianet News
Published : Jun 03, 2022, 01:55 PM IST

இரண்டு சூப்பர்ஸ்டார்களின் கூட்டணி வெற்றியை உருவாக்காது என்றும் ஆரம்பத்தில் இருவரும் இணைந்து நடித்ததாகவும், பின்னர் ஒன்றாக நடிக்க வேண்டாம் என்று முடிவு செய்ததாகவும் கமல்ஹாசன் தெரிவித்தார்.

PREV
14
ரஜினி..கமல் கூட்டணி..கட்டாயம் நடக்காது..பளீச் பதிலளித்த உலகநாயகன்..ஏன் தெரியுமா?
kamal rajini

கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகியுள்ள ' விக்ரம் ' முதல் நாளிலிலேயே நல்ல வெற்றியை பெற்றுள்ளது.லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் , ஃபஹத் பாசில் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கமல்ஹாசன் கடந்த 15 நாட்களாக முழு வீச்சில் 'விக்ரம்' படத்தை விளம்பரப்படுத்தி வருகிறார். இது நாடு முழுவதும் உள்ள ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

24
kamal and rajini alliance modi

'விக்ரம்' படத்திற்கான ப்ரோமோஷன் விழாவில் நடிகர் தனது வாழ்க்கை மற்றும் திரைப்படத் துறை பயணம் பற்றியும் தெரியாத பல உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளார்..  அந்த வகையில் டிஜிட்டல் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த கமல், ரஜினிகாந்தும் தானும் கடந்த 40 ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் ஏன் இணைந்து நடித்ததில்லை என்பதை வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது

34
rajini - kamal

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து மீண்டும் நடிப்பது குறித்து கேட்கப்பட்ட போது,  ஆரம்பத்தில் இருவரும் இணைந்து நடித்ததாகவும், பின்னர் ஒன்றாக நடிக்க வேண்டாம் என்று முடிவு செய்ததாகவும் கமல்ஹாசன் தெரிவித்தார். அதோடு இரண்டு சூப்பர் ஸ்டார்களின் கூட்டணி வெற்றியை உருவாக்காது என பேட்டியளித்தாக தகவல் வெளியாகியுள்ளது.

44
rajini - kamal

கமல் - ரஜினிகாந்த் இருவரும் 16 வயதினிலே, இளமை ஊஞ்சலாடுது, அபூர்வ ராகங்கள், அவர்கள், மூன்று முடிச்சு உள்ளிட்ட பல படங்களிலி சேர்ந்து நடித்துள்ளனர். இதில் பெரும்பாலான படங்கள் அக்காலகட்டத்தில் ஹிட் அடித்தன. பெரும்பாலும் ரஜினி வில்லனாகவே தோன்றி இருப்பார்.

Read more Photos on
click me!

Recommended Stories