Prabhas : லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க மறுத்த பிரபாஸ்... என்ன காரணம் தெரியுமா?

Published : Jun 03, 2022, 11:47 AM IST

Prabhas reject Lokesh Kanagaraj : நடிகர் பிரபாஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க மறுத்ததாக தகவல் வெளியாகி கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

PREV
14
Prabhas : லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க மறுத்த பிரபாஸ்...  என்ன காரணம் தெரியுமா?

பாகுபலி படத்தின் மூலம் பான் இந்தியா நடிகராக உருவெடுத்தவர் பிரபாஸ். இதையடுத்து இவர் நடித்த பாகுபலி 2-ம் பாகமும் பிளாக்பஸ்டர் ஹிட்டானதால், அடுத்தடுத்து பெரிய பட்ஜெட் படங்களில் நடிக்க ஒப்பந்தமானார் பிரபாஸ். ஆனால் பாகுபலிக்கு பின் இவர் நடிப்பில் வெளியான சாஹோ மற்றும் ராதே ஷ்யாம் ஆகிய இரண்டு படங்களும் பிளாப் ஆகின. 

24

அதேபோல் பாக்ஸ் ஆபிஸிலும் மரண அடி வாங்கியது. குறிப்பாக இவர் நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியான ராதே ஷ்யாம் திரைப்படம் சுமார் 100 கோடிக்கு மேல் நஷ்டத்தை சந்தித்ததாக கூறப்படுகிறது. இரு படங்களின் தோல்வியால் அடுத்தடுத்த பட தேர்வுகளில் மிகவும் கவனமாக இருந்து வருகிறாராம் பிரபாஸ்.

34

அந்த வகையில் தற்போது நடிகர் பிரபாஸ் கைவசம் சலார், ஆதிபுருஷ், ஸ்பிரிட், புராஜெக்ட் கே ஆகிய படங்கள் உள்ளன. இதில் சலார் படத்தை கேஜிஎஃப் பட இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்குகிறார். இப்படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக சுருதிஹாசன் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

44

இந்நிலையில், நடிகர் பிரபாஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க மறுத்ததாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், நடிகர் பிரபாஸை ஐதராபாத்தில் சந்தித்து கதை சொன்னதாகவும், அந்த கதை பிடிக்காததால் அதில் நடிக்க பிரபாஸ் மறுத்துவிட்டதாகவும் செய்திகள் பரவி வருகின்றன. இருப்பினும் இதுகுறித்து இருவர் தரப்பில் இருந்தும் எந்தவித தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... Vikram Movie Review : கமல் - லோகேஷ் கூட்டணி மிரட்டலா? சொதப்பலா? - விக்ரம் படத்தின் முழு விமர்சனம் இதோ

Read more Photos on
click me!

Recommended Stories