ரஜினியுடனான திரைப்படம் எப்போது தொடங்கும்? - ஓபனாக சொன்ன கமல் ஹாசன்

Published : Mar 20, 2026, 09:09 PM IST

Kamal Haasan Talk About Rajinikanth Movie Shoot : இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பது குறித்து கமல் ஹாசன் ஓபனாக பேசியுள்ளார்.

PREV
14
Kamal Haasan open talk about Rajinikanth Movie Shoot

தமிழ் சினிமாவின் இரண்டு மாபெரும் நட்சத்திரங்களான ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் மீண்டும் ஒரே படத்தில் இணைவார்களா என்ற கேள்வி ரசிகர்களிடையே நீண்ட நாட்களாக இருந்தன. இருவரும் தங்கள் தனித்துவமான நடிப்பு, ஸ்டைல் மற்றும் கதை தேர்வுகளால் பல தசாப்தங்களாக ரசிகர்களை கவர்ந்து வருகிறார்கள். முன்னர் சில படங்களில் இணைந்து நடித்த அனுபவம் இருந்தாலும், சமீப காலமாக அவர்கள் தனித்தனி பாதையில் பயணித்து வருகின்றனர்.

தனி விமானம் மூலம் மும்பை பறந்த விஜய்.. பின்னணி என்ன? அரசியல் வியூகமா? ஜன நாயகன் அப்டேட்டா?

24
Kamal Haasan and Rajinikanth movie 2026

நீண்ட நாட்களாக ரசிகர்கள் எதிர்பார்த்த இந்த கூட்டணி தற்போது நிஜமாகும் நிலையில், இப்படத்தை நெல்சன் தீலிப்குமார் இயக்க, தயாரிப்பை ரெட் ஜெயிண்ட் மூவிஸ் மேற்கொள்வார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. சமீபத்தில் வெளியான ப்ரோமோவில், இருவரும் தனித்தனியாக ஸ்டைலிஷ் ஆடை, குளாஸ், வாட்ச் போன்றவற்றை தேர்வு செய்து, பின்னர் ஒரே ஃப்ரேமில் நடந்து வருவது திரையரங்க அனுபவத்தை முன்கூட்டியே உணர்த்தியது. குறிப்பாக ரஜினி கார் சாவியை கமலிடம் வீசும் காட்சி, பின்னர் “இதில் ஹீரோ யார்?” என்ற கேள்வி எழும் தருணம் ரசிகர்களை கவர்ந்து உள்ளது.

34
Director Nelson to direct Rajini and Kamal

இந்த படம் ஆக்ஷன், காமெடி, எமோஷன் ஆகிய அனைத்தையும் இணைக்கும் முழுமையான எண்டர்டெய்னராக உருவாகும் என கூறப்படுகிறது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் பான்-இந்தியா ரிலீஸாக திட்டமிடப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் 1000 கோடி ரூபாய் வசூல் செய்த படம் இல்லை என்ற குறையை இந்த படம் தீர்க்கும் என்ற நம்பிக்கை அதிகமாக உள்ளது. ப்ரொமோவில், “ இதில் ஹீரோ யார்?” என்ற கேள்வி எழுப்பும் அதற்கான பதில் சொல்லாமல் ஸ்டைலாக காட்சியை நகர்த்துவது ரசிகர்களை கவர்ந்துள்ளது.

எட்டப்பன் வேலையை ஆரம்பித்த சந்திரகலா! திருந்தவே திருந்தாத மனுச ஜென்மம்! கார்த்திகை தீபம் அதிரடி எபிசோட்!"

44
Kamal Haasan open talk about Rajinikanth collaboration

இந்நிலையில் கமல் ஹாசன் இன்று (மார்ச்.20) செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் படம் தொடர்பான கேள்வி கேட்கப்பட்டது. அப்போது பேசிய அவர், “ கமல் ஹாசன், ரஜினியுடன் இணையும் படம் தேர்தல் முடிந்த பிறகு தான் ஆரம்பிக்க வேண்டும். தேர்தல் பணி இருக்கிறது “ என்றார். தமிழ் சினிமாவை தாண்டி இந்திய திரையுலகையே ஆளும் இரு மாபெரும் நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன். தங்கள் கரியர் ஆரம்பத்தில் அவள் அப்படித்தான், 16 வயதினிலே போன்ற படங்களில் இணைந்து நடித்த இவர்கள், பின்னர் தங்களுக்குள் எடுத்த முடிவின் பேரில் தனித்தனியாக பயணித்தனர். அதன் பிறகு சுமார் 40 ஆண்டுகளாக இவர்கள் இணைந்து நடிக்காதது ரசிகர்களுக்கு எப்போதும் ஒரு குறையாகவே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories