'விக்ரம்' படத்திற்காக உதயநிதிக்கு நினைவு பரிசு கொடுத்த கமல்..! பதிலுக்கு அவர் கொடுத்தது என்ன தெரியுமா?

Published : Jul 08, 2022, 12:19 PM IST

நடிகர் கமலஹாசன் 'விக்ரம்' படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து, இந்த படத்தில் தன்னுடன் இணைந்து பணியாற்றிய பலருக்கு அடுத்தடுத்து பரிசுகள் கொடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்த நிலையில், தற்போது நடிகரும், தயாரிப்பாளரும், டிஸ்ட்ரிபியூட்டருமான, உதயநிதிக்கு நினைவு பரிசினை வழங்கியுள்ளார். இது குறித்த புகைப்படங்களை உதயநிதி தன்னுடைய twitter பக்கத்தில் பதிவிட்டு நன்றி தெரிவித்துள்ளார்.  

PREV
15
'விக்ரம்' படத்திற்காக உதயநிதிக்கு நினைவு பரிசு கொடுத்த கமல்..! பதிலுக்கு அவர் கொடுத்தது என்ன தெரியுமா?

கடந்த சில வருடங்களாக ஒரு வெற்றி படத்தை கொடுக்க போராடி வந்த நடிகர் கமலஹாசனுக்கு, மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஜூன் 3 தேதி வெளியான 'விக்ரம்' திரைப்படம். 'கமலஹாசன்', 'பகத் பாசில்', 'விஜய் சேதுபதி', 'சூர்யா' என பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்த, இந்த திரைப்படம் அனைத்து ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது.

25

இதைத்தொடர்ந்து, இப்படத்தின் இயக்குனரான இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு, நடிகரும் இந்த படத்தின் தயாரிப்பாளருமான கமலஹாசன் லெக்சஸ் சொகுசு காரை பரிசாக வழங்கினார். மேலும் இப்படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய, 10-க்கும் மேற்பட்டோருக்கு டிவிஎஸ் அப்பாச்சி பைக்கை பரிசாக கொடுத்தார்.

மேலும் செய்திகள்: கணவர் இறந்து ஒரு வாரமே ஆகும் நிலையில்... மீனா பற்றி வெளியான இப்படி ஒரு வதந்தி! சொல்லியும் கேட்கலையே..!
 

35

அதேபோல் 'விக்ரம்' படத்தில் கடைசி ஐந்து நிமிடங்கள் மட்டுமே நடித்தாலும் ரோலக்ஸ் என்கிற கதாபாத்திரத்தில் மிரட்டிய நடிகர் சூர்யாவிற்கு, விலை மதிப்புள்ள ரோலக்ஸ் வாட்சையே பரிசாக கொடுத்து அசத்தினார். இதைத்தொடர்ந்து தற்போது இந்த படத்தின் டிஸ்ட்ரிபியூட்டரான உதயநிதிக்கு நினைவு பரிசினை வழங்கியதாக அவரே தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் வெளியிட்டு தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்: கவர்ச்சி காட்டுவதில் அக்கா யாஷிகாவுக்கே டஃப் கொடுக்கும் ஒஷீன்..! ப்பா... அதுக்குன்னு இப்படியா?
 

45

இது குறித்து உதயநிதி தன்னுடைய பதிவில் கூறியுள்ளதாவது ,'நெஞ்சுக்கு நீதி' படத்தை பார்த்துவிட்டு குழுவினரை இன்று அழைத்து பாராட்டிய கமலஹாசன் சாருக்கு நன்றி. 'விக்ரமில்' உடன் பங்கேற்றதற்காக நினைவு பரிசினை வழங்கினார் என்றும், நாங்கள் பெரியார் மற்றும் அம்பேத்கர் சிலைகளை பரிசளித்த மகிழ்ந்தோம் என்றும் கூறியுள்ளார். தற்போது இவரது பதிவு சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.

மேலும் செய்திகள்: எந்த நடிகைக்கு வரும் இப்படி ஒரு துணிச்சல்? ஆண்ரியாவின் முயற்சியை கண்டு வாயடைத்து போன ரசிகர்கள்!! வைரல் வீடியோ.
 

55

அருண் ராஜா  காமராஜ் இயக்கத்தில், உதயநிதி நடிப்பில் கடந்த மே மாதம் வெளியான 'நெஞ்சுக்கு நீதி' திரைப்படம் விமர்சனம் ரீதியாகவும், வசூல் ரீதியாகவும், நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது உதயநிதி மகிழ் திருமேனி இயக்கத்தில் ஒரு படமும், மாமனிதன் ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Read more Photos on
click me!

Recommended Stories