மும்பை தொழிலதிபரை பெற்றோர் சம்மதத்துடன் கரம் பிடித்த காஜல், தனியாக வீடு வாங்கி குடியேறினார்.
திருமணம் முடிந்த ஒரு சில வாரங்களில், கணவருடன் மாலத்தீவுக்கு தேனிலவு சென்று செம்ம என்ஜோய் செய்தார்.
அவ்வப்போது மாலத்தீவில் அவர் தேனிலவு கொண்டாடிய புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து சிங்கிள்களை செம்ம காண்டாகினார்.
மேலும் காஜல் அகர்வால் மாலத்தீவில் விலையுயர்ந்த ஹோட்டலில் குறிப்பாக கடலுக்கு அடியில் அமைக்கப்பட்டிருந்த அறையில் தங்கி இருந்ததாகவும் இதற்காக அவர் லட்சக்கணக்கில் செலவு செய்ததாகவும் தகவல் வெளியானது.
மாலத்தீவை பொறுத்தவரை அங்குள்ள சுற்றுலா தளங்களை உலகம் முழுவதும் பிரபலப்படுத்துவதற்காக ஒரு சலுகை வழங்கியுள்ளதாம்.
அதன்படி இன்ஸ்டாகிராமில் இரண்டு மில்லியனுக்கும் அதிகமாக ஃபாலோயர்கள் இருப்பவர்கள் மாலத்தீவுக்கு வருகை தந்தால் அவர்களுக்கு ஹோட்டலில் உணவு இலவசம் என்றும் ஐந்து மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் இருப்பவர்கள் வருகை தந்தால் அவர்களுக்கு ஹோட்டல் உணவு மற்றும் இரண்டு ரிட்டர்ன் டிக்கெட் இலவசம் என்றும் 10 மில்லியனுக்கு மேல் ஃபாலோயர்கள் இருப்பவர்கள் வருகை தந்தால் போகவர டிக்கெட் மற்றும் ஹோட்டல், உணவு, தங்குமிடம் என அனைத்துமே இலவசம் என்றும் நாம் நமக்கு தேவையான உடைகளை மட்டும் எடுத்து வந்தால் போதும் எதற்கும் பணம் செலுத்த வேண்டாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
காஜல் அகர்வாலுக்கு 16.3 மில்லியன் ஃபாலோயர்கள் இருப்பதால் அவர் தனது கணவருடன் பணமே செலவு செய்யாமல் பக்காவாக மாலத்தீவிற்கு சென்று தன்னுடைய தேனிலவை ஜாலியாக என்ஜாய் செய்து வந்துள்ளார்.
காஜல் அகர்வால் மட்டுமின்றி சமந்தா, ப்ரணிதா சுபாஷ், வேதிகா உள்பட பலர் மாலத்தீவு சென்றுள்ளதும் இந்த சலுகையின் அடிப்படையில் தான் என்று கூறப்படுகிறது.
இந்த சலுகைகளை அனுபவிக்கும் நடிகைகள், அவ்வப்போது மாலத்தீவில் இயற்க்கை அழகை புகைப்படம் எடுத்து, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் உலகில் உள்ள சுற்றுலா பயணிகளில் பார்வையை ஈர்க்க புது பிளான் போட்டுள்ளதாம் அந்த நாட்டு சுற்றுலா துறை.