நிதேஷ் திவாரி இயக்கும் 'ராமாயணம்' படம் பான் இந்தியா அளவில் தயாராகிறது. எனவே அனைத்து மொழிகளிலும் இருந்து பிரபலமான நடிகர், நடிகைகளைத் தேர்வு செய்து நடிக்க வைக்க படக்குழு முனைப்பு காட்டி வருகிறது. அதன்படி இப்படத்தில் ரன்பீர் கபூர் ராமனாகவும், சாய் பல்லவி சீதையாகவும் நடிக்க, ராக்கிங் ஸ்டார் யாஷ் ராவணனாக நடிக்கிறார். இப்படத்தில் யாஷுக்கு ஜோடியாக நடிக்க உள்ள நடிகை பற்றிய அப்டேட் வெளியாகி உள்ளது.
24
யாஷுக்கு ஜோடியாக நடிக்கும் காஜல் அகர்வால்
அதன்படி, ராவணனாக நடிக்கும் யாஷுக்கு ஜோடியாக பிரபல தென்னிந்திய நடிகை காஜல் அகர்வால் நடிக்க உள்ளாராம். அவர் இப்படத்தில் மண்டோதரி என்கிற கேரக்டரில் நடிக்க இருக்கிறார். சில நாட்களுக்கு முன்பு நடிகை காஜல் அகர்வால் 'ராமாயணம்' படக்குழுவினர் நடத்திய லுக் டெஸ்டில் கலந்து கொண்டார். பின்னர் ஒரு சிறிய காட்சியில் நடித்துக் காட்டி ஆடிஷனிலும் பாஸ் ஆனதால் அவரை மண்டோதரி கேரக்டரில் நடிக்க கமிட் செய்துள்ளனர்.
34
தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் ராமாயணம்
தற்போது படக்குழு ராவணனின் காட்சிகளாஇ படமாக்கி வருகிறது. விரைவில் மண்டோதரி நடிக்கும் காட்சிகளின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது 'ராமாயணம்' படத்தின் முதல் பாகத்தின் பர்ஸ்ட் லுக்கிற்காக மக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். 2026ம் ஆண்டு தீபாவளிக்கு இப்படம் திரைக்கு வர உள்ளது. இப்படத்தின் மூலம் நடிகர் யாஷும், நடிகை காஜல் அகர்வாலும் முதன்முறையாக ஜோடி சேர்ந்துள்ளனர்.
ராமாயணம் படத்தில் நடிக்க பிரபலங்களுக்கு சம்பளம் வாரி வழங்கப்பட்டு இருக்கிறது. குறிப்பாக இதில் சீதையாக நடிக்கும் சாய் பல்லவிக்கு ரூ.15 கோடி சம்பளமாக வழங்கப்பட்டு இருக்கிறதாம். இது அவர் நடிக்கும் முதல் பாலிவுட் படமாகும், அதிலேயே அவருக்கு அதிகப்படியான சம்பளம் வழங்கப்பட்டு இருப்பது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது. அதேபோல் ராவணனாக நடிக்கும் நடிகர் யாஷுக்கு ரூ.200 கோடி சம்பளமாக வழங்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.