நடிகர் அஜித் கார் ரேஸில் பங்கேற்க 42 கிலோ எடை குறைத்துள்ளார். டயட், நீச்சல், சைக்கிளிங் போன்ற பயிற்சிகள் மூலம் எடையைக் குறைத்ததாகவும், டீ, காபி போன்றவற்றைத் தவிர்த்ததாகவும் அவர் பேட்டியில் தெரிவித்துள்ளார்.
விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லீ. 42 கிலோ உடல் எடை குறைய காரணம்,
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் அஜித் குமார். இந்த ஆண்டில் மட்டும் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லீ என்று 2 படங்களில் நடித்து வெளியிட்டுள்ளார். இதில், விடாமுயற்சி கலவையான விமர்சனம் பெற்ற நிலையில் எதிர்பார்த்த ஹிட் கொடுக்கவில்லை. அதன் பிறகு வந்த குட் பேட் அக்லீ படம் ரசிகர்களின் பேராதரவை பெற்ற நிலையில் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றது.
25
பத்ம பூஷன் விருது
சினிமாவில் ஒரு பக்கம் சாதித்த நிலையில் கார் ரேஸில் இப்போது கலக்கி வருகிறார். அதுமட்டுமின்றி இந்தியாவிற்கு பெருமை சேர்த்து கொடுத்ததோடு நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம பூஷன் விருது அஜித்துக்கு வழங்கப்பட்டது. படங்களில் நடிப்பதோடு சரி, வெளியில் பெரும்பாலும் வருவதில்லை. அஜித்தை திரையரங்குகளில் பார்ப்பதோடு சரி, வேறெங்கும் அஜித்தை பார்க்க முடியாது. ஆனால் இப்போது அஜித் ரசிகர்களுக்கு கொண்டாட்டமான ஆண்டாக அமைந்துவிட்டது.
35
நீண்ட இடைவெளிக்கு பிறகு நேர்காண்ல்
அடிக்கடி பொது வெளியில் காட்சி கொடுக்கிறார். சென்னையில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி போட்டியை தனது குடும்பத்தோடு கண்டு ரசித்தார். இந்த நிலையில் தான் பல ஆண்டு இடைவெளிக்கு பிறகு பேட்டி கொடுத்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார். இந்த நிலையில் தான் கார் ரேஸில் பங்கேற்பதற்காக தனது உடல் எடையை கிட்டத்தட்ட 42 கிலோ குறைத்துள்ளார்.
ஏற்கனவே அஜித் கார் ரேஸ் பயிற்சி செய்த போது எடுக்கப்பட்ட புகைப்படமும், வெற்றி பெற்ற வீடியோ காட்சிகளும் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த நிலையில் தான் சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் நான் மீண்டும் கார் ரேஸில் பங்கேற்க வேண்டுமானால், ஃபிட்டாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். இதற்காக கடந்த ஆகஸ்ட் 2024 ஆம் ஆண்டு முதல் இப்போது வரையில் கிட்டத்தட்ட 8 மாதங்கள் வரையில் நான் குறைந்தது 42 கிலோ வரையில் குறைத்திருக்கிறேன். இதற்காக நான் டயட் ஃபாலோ செய்தேன். மேலும், குறைவான அளவு உணவு, ஸ்விம்மிங், சைக்கிளிங் என்று பல பயிற்சிகள் எடுத்தேன். அதுமட்டுமின்றி டீ, காபி என்று எதுவும் கிடையாது. மொத்தத்தில் டீ டோட்டலராக மாறினேன்.
55
ஏகே64 படத்தின் இயக்குநர் யார்
இதற்கெல்லாம் ஒரே ஒரு காரணம் என்னவென்றால் ரேஸில் கலந்து கொள்ள வேண்டுமானால் உடல் ஃபிட்டாக இருக்க வேண்டும் அதை மட்டும் தான் நான் கருத்தில் எடுத்துக் கொண்டேன். மேலும், தன்னுடைய அடுத்த படம் 2025 ஆம் ஆண்டில் படப்பிடிப்பு தொடங்கி 2026ல் கோடை விடுமுறையை முன்னிட்டு வெளியாகும் என்று அறிவித்துள்ளார். ஆனால், அவரது ஏகே64 படத்தின் இயக்குநர் யார் என்பது பற்றி தான் அவர் அறிவிக்கவில்லை.