கோலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித் குமார், ஷாலினியை திருமணம் செய்யும் முன்னரே நடிகை ஹீராவை காதலித்தார்.
அஜித்தும் ஹீராவும் முதன்முறையாக காதல் கோட்டை படத்தில் இணைந்து நடித்தனர். அப்போது இவர்கள் இடையே காதல் மலர்ந்துள்ளது.
காதல் கோட்டை ஷூட்டிங் சமயத்தில் ஹீராவுக்கு ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே காதல் கடிதம் எழுதுவாராம் அஜித்குமார்.
சில வருட காதலுக்கு பின் முகவரி படத்தின் போது இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டதால் அஜித் - ஹீரா பிரேக் அப் செய்து பிரிந்துவிட்டனர்.
ஹீராவுடனான காதல் முறிவுக்கு பின் அளித்த பேட்டி ஒன்றில் இதைப்பற்றி மனம் திறந்து பேசி இருக்கிறார் அஜித்.
நாங்கள் ஒன்றாக வாழ்ந்தோம், நான் ஹீராவை மிகவும் நேசித்தேன் என அஜித் கூறி உள்ளார்.
ஹீராவிடம் ஏற்பட்ட சில மாற்றங்களால் அவரை பிரிய முடிவு செய்ததாக அஜித் அந்த பேட்டியில் கூறி இருந்தார்.
ஹீரா போதை பழக்கத்துக்கு அடிமையானதால் அவரை அஜித் பிரிந்ததாக அன்றைய காலகட்டத்தில் பரவலாக பேசப்பட்டது.
70 ஆண்டு பழமையான காஞ்சிபுரம் சேலையில் மிளிரும் ரெட்ரோ நாயகி பூஜா!
பாக்ஸ் ஆபிஸ் குயின் சமந்தா நடித்து அதிக வசூல் அள்ளிய டாப் 10 படங்கள்!
பெற்றோரின் விவாகரத்தால் தலைகீழாக மாறிய வாழ்க்கை - ஸ்ருதிஹாசன் ஆதங்கம்
பாக்ஸ் ஆபிஸில் அதிக வசூல் அள்ளிய அஜித் படங்கள் ஒரு பார்வை!