தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். டாப் ஹீரோக்கள் அனைவருடனும் ஜோடி போட்டு நடித்துள்ளார்.
தற்போது கமல்ஹாசன் மற்றும் ஷங்கர் கூட்டணியில் உருவாகும் இந்தியன் 2 படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார் காஜல்.
சமீபத்தில் திருமணம் தொடர்பாக காஜல் அகர்வால் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார்.
அதில் தொழிலபதிபர் கவுதம் கிச்சலுக்கும் தனக்கும் திருமணம் நடைபெற உள்ளதாக அவரே தெரிவித்துள்ளார்.
இண்டீரியர் டிசைனர் துறையில் தொழிலதிபராக இருப்பவர் கவுதம் கிச்சலு, அவருக்கும் காஜலுக்கும் வரும் 30ம் தேதி மும்பையில் திருமணம் நடைபெற உள்ளதாக தனது சோசியல் மீடியா பக்கத்தில் அறிவித்துள்ளார்.
மும்பையில் உள்ள ஸ்டார் ஓட்டலில் நடைபெற இருந்த காஜல் அகர்வால் திருமணம் அவரது வீட்டிலேயே திருமணம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இவருடைய திருமணத்தில், மிகக் குறைந்த அளவில் மட்டுமே உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வரவழைக்கப்படுவார்கள் என்றும் அனைவரும் தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்ற வேண்டுகோள் விடுக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
காஜலின் திருமணத்திற்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், காதல் கணவரை கட்டி அணைத்தபடி, இவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தை இவரது ரசிகர்கள் வைரலாகி வருகிறார்கள்.