அரபிக்கடலை பார்த்த மாதிரி அடுக்குமாடி வீடு... கோடிகளைக் கொட்டிக்கொடுத்த சூப்பர் ஸ்டார்... விலை என்ன தெரியுமா?

First Published | Oct 25, 2020, 8:00 PM IST

கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கி வந்தாலும் ரித்திக் ரோஷன் இதுவரை வாடகை வீட்டில் தான் வசித்து வந்தாராம். இப்போது தான் மும்பையில் தனக்கென சொந்த வீடு வாங்கியுள்ளாராம். 

பாலிவுட்டின் ஹேண்ட்ஷம் ஸ்டாரான ரித்திக் ரோஷனை தெரியாதவர்கள் இருக்க முடியாது. இவருடைய நடன அசைவுகளை ரசிப்பதற்காகவாது ஒருமுறை அவருடைய படத்தை கண்டிப்பாக பார்த்திருப்போம்.
கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கி வந்தாலும் ரித்திக் ரோஷன் கடந்த ஜூன் மாதம் முதல் வாடகை வீட்டில் தான் வசித்து வந்தாராம். இப்போது தான் மும்பையில் தனக்கென சொந்த வீடு வாங்கியுள்ளாராம்.
Tap to resize

பெண்ட் ஹவுஸில் 15 மற்றும் 16 மாடியில் வீடுகளை வாங்கியுள்ளார் ரித்திக் ரோஷன் அவற்றின் விலை ரூ.67.50 கோடியாம். 14வது மாடியில் உள்ள அப்பார்ட்மெண்டிற்கு ரூ.30 கோடி கொடுத்துள்ளாராம்.
இங்கு ரித்திக் ரோஷன் வீட்டிற்கு செல்வதற்கு என தனி லிப்ட் வசதியும், 10 கார்கள் நிறுத்தும் அளவிற்கு இடமும் ஒதுக்கப்பட்டுள்ளதாம்.
இந்த வீட்டின் பத்திரப்பதிவு வேலைகள் முடிந்துள்ள நிலையில் அதற்காக மட்டும் ரித்திக் ரோஷன் 1.95 கோடி ரூபாய் கட்டியுள்ளதாக கூறப்படுகிறது. அரபிக்கடலை ரசித்த படி அமைந்துள்ள இந்த வீட்டின் விலையை கேட்டு ரசிகர்களுக்கு தலை சுற்றுகிறது.

Latest Videos

click me!