'காதல் கொண்டேன்' திரைப்படத்தின் மூலம், இரண்டாவது ஹீரோவாக அறிமுகமானவர், சுதீப் சாரங்கி. இப்படத்தில், தனுஷுக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் இருந்ததோ... அதேபோல் சுதீப் சாரங்கியின் கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் இருந்தது. சோனியா அகர்வாலுக்கு கூட சுதீப் சாரங்கி தான் ஜோடியாக இருந்தார்.
எனவே பெங்காலி மற்றும் ஹிந்தியில் சில படங்களில் நடித்தார். அதுவும் கை கொடுக்காததால், ஹிந்தியில் முழு நேர சீரியல் நடிகராக மாறினார்.
இந்நிலையில் சுதீப், கால் டாக்ஸி டிரைவர் உடையில் இருப்பது போன்ற ஒரு புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்தது. மேலும் ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு ஒல்லியாக மாறி, பார்க்கவே மிகவும் பரிதாபமாக இருக்கிறார். இவரை பார்த்த ரசிகர்கள் பலர் கால் டாக்சி ஓட்டுகிறீர்களா என கேள்வி எழுப்ப இது விளம்பர படம் ஷூட்டிங் ஒன்றில் எடுக்கப்பட்ட புகைப்படம் என்று விளக்கம் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
யாஷிகாவுடன் காதல்? கட்டிப்பிடித்து ரொமான்ஸ் செய்ததன் ரகசியம் பற்றி உண்மையை உடைத்த நடிகர் ரிச்சர்ட்!