சூர்யாவிடம் இப்படியொரு கெட்ட பழக்கம் இருக்கா... ஜோதிகா போட்டுடைத்த சீக்ரெட்

Published : Jan 28, 2026, 01:44 PM IST

சூர்யாவிடம் உள்ள அந்த ஒரு கெட்ட பழக்கத்தை மட்டும் என்னால் சகித்துக்கொள்ள முடியாது. இதற்காக நாங்கள் சண்டையிடுவோம் என அவரின் மனைவி ஜோதிகா பேட்டி ஒன்றில் கூறி உள்ளார்.

PREV
14
Suriya Bad Habit

தமிழ் திரையுலகில் ரீல் ஜோடியாக இருந்து ரியல் ஜோடியாக மாறிய பிரபலங்கள் ஏராளம் இருந்தாலும், அவர்களில் சூர்யா - ஜோதிகா ஜோடியும் ஒரு அங்கமாக இருக்கிறார்கள். ஒன்றாகப் படங்களில் நடித்து, காதலித்துத் திருமணம் செய்துகொண்ட இவர்கள், லவ் மேரேஜ் செய்ய விரும்பும் ஜோடிகளுக்கு ஒரு ரோல் மாடலாக இருந்து வருகிறார்கள். வாழ்ந்தா சூர்யா - ஜோதிகா மாதிரி வாழணும் என பலரும் சொல்லும் அளவுக்கு சிறந்த ஜோடியாக இவர்கள் வலம் வருகிறார்கள். திருமணமாகி 20 ஆண்டுகள் ஆனாலும் இவர்களுக்கு இடையேயான காதல் துளி அளவு கூட குறையவில்லை.

24
சூர்யா - ஜோதிகா ஜோடி

சூர்யா - ஜோதிகா ஜோடிக்கு தியா என்ற மகளும், தேவ் என்ற மகனும் உள்ளனர். திருமணத்துக்கு பின்னர் சினிமாவில் இருந்து விலகியே இருந்த ஜோதிகா, குழந்தைகள் வளர்ந்த பின்னர் மீண்டும் தன்னுடைய செகண்ட் இன்னிங்ஸை தொடங்கி அசத்தி வருகிறார். தற்போது குழந்தைகளின் கல்விக்காக மும்பையில் வசிக்கும் இந்த ஜோடி, அடிக்கடி ஊடகங்களில் செய்தியாகின்றனர். இப்போது சமூக வலைதளங்களில் இவர்களைப் பற்றிய ஒரு செய்தி வைரலாகி வருகிறது. அது என்னவென்று பார்க்கலாம்.

34
காதலில் ஜெயித்த சூர்யா

சினிமா நட்சத்திரங்களின் திருமணங்கள் சமீபகாலமாக விவாகரத்து மூலம் செய்தியாகின்றன. ஆனால் சூர்யா-ஜோதிகா ஜோடி அழகான, மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கையை நடத்தி மற்றவர்களுக்கு முன்மாதிரியாக உள்ளனர். 90களில் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஜோதிகா. 'காக்க காக்க' படத்தில் சூர்யாவுடன் இணைந்து நடித்தபோது, இருவருக்கும் காதல் மலர்ந்து திருமணம் செய்துகொண்டனர். திருமணத்திற்குப் பிறகும் ஜோதிகா படங்களில் பிசியாக இருக்கிறார்.

44
சூர்யாவிடம் உள்ள கெட்ட பழக்கம் என்ன?

மும்பையில் வசித்து வரும் சூர்யா மற்றும் ஜோதிகா, சமீபத்தில் தங்களது 19வது திருமண நாளை கொண்டாடினர். அப்போது ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்த நிலையில், சூர்யாவின் மனைவி ஜோதிகா முன்பு ஒரு பேட்டியில் பேசியது வைரலாகி வருகிறது. 'என் கணவர் சூர்யா என்னுடன் நட்பாக இருப்பார். எனக்கு மிகுந்த மரியாதை கொடுப்பார். அது எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால், சூர்யாவுக்கு ஒரு கெட்ட பழக்கம் இருக்கிறது. அது எனக்குப் பிடிக்காது. அவர் பாத்ரூமில் அதிக நேரம் செலவிடுவார். இந்த பழக்கத்தை மட்டும் என்னால் சகித்துக்கொள்ள முடியாது. இதற்காக நாங்கள் சண்டையிடுவோம்' என்றார் ஜோதிகா.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories