சூர்யா படங்கள் மட்டும் கடுமையாக விமர்சிக்கப்படுவது ஏன்? ஃபீலிங்ஸை கொட்டிய ஜோதிகா

Published : Mar 11, 2025, 01:37 PM IST

தன் கணவர் சூர்யாவின் படங்கள் மட்டும் கடுமையான விமர்சனங்களை சந்திப்பது போல் உணர்கிறேன் என நடிகை ஜோதிகா பேட்டி ஒன்றில் கூறி உள்ளார்.

PREV
14
சூர்யா படங்கள் மட்டும் கடுமையாக விமர்சிக்கப்படுவது ஏன்? ஃபீலிங்ஸை கொட்டிய ஜோதிகா

Jyothika about suriya movie Negative Reviews : நடிகர் சூர்யாவின் மனைவி ஜோதிகா தற்போது பாலிவுட்டில் பிசியாக நடித்து வருகிறார். இவர் நடிப்பில் அண்மையில் டப்பா கார்டெல் என்கிற வெப் தொடர் வெளியானது. நெட்பிளிக்ஸில் ரிலீஸ் ஆன இந்த வெப் தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த நிலையில், இந்த வெப் தொடருக்கான புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது தன்னுடைய கணவர் சூர்யாவின் படங்கள் பற்றி பேசி இருக்கிறார் ஜோதிகா.

24
actress Jyothika

நடிகர் சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியாகி படுதோல்வியை சந்தித்த கங்குவா படம் ரிலீஸ் ஆனபோதே, அப்படத்தின் மீது வந்த நெகடிவ் விமர்சனங்கள் எல்லைமீறி இருப்பதாக சாடியும் படத்தில் ஒரு சில குறைகள் இருந்தாலும், அதில் உள்ள நிறைகளை பற்றி யாருமே பேசவில்லை என்று தன் ஆதங்கத்தை கொட்டினார். இந்நிலையில் தற்போது டப்பா கார்டெல் புரமோஷனின் போதும் தன் கணவர் படங்கள் மீது வைக்கப்படும் விமர்சனங்கள் பற்றியும் அது மனதளவில் பாதிப்பை தந்ததாகவும் கூறினார்.

34
Jyothika about Negative Review

அதில் அவர் கூறியதாவது : “மோசமான திரைப்படங்கள் தான் எனக்கு பிரச்சனை. பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய அளவில் வெற்றிபெற்ற பல மோசமான திரைப்படங்களை நான் பார்த்திருக்கிறேன். ஆனால் அந்த படங்களுக்கெல்லாம் பெரிய மனசோடு விமர்சனம் செய்துவிடுவார்கள். ஆனால் என்னுடைய கணவர் நடித்த திரைப்படங்களைப் பொறுத்தவரை அந்த விமர்சனங்கள் மிகவும் கடுமையாக இருப்பதை நான் உணர்கிறேன் என ஜோதிகா தெரிவித்தார்.

44
Jyothika Suriya

தொடர்ந்து பேசிய அவர், படத்தில் சில பகுதியில் நல்லா இல்லாம இருந்திருக்கலாம். ஆனால் ஒட்டுமொத்த படத்திற்காக மிகவும் கஷ்டப்பட்டு தான் உழைத்திருக்கிறார்கள். சில மோசமான படங்களைவிட சூர்யா படங்கள் கடுமையான விமர்சனங்களை சந்திப்பதை பார்த்தபோது அது என்னை மனதளவில் மிகவும் பாதித்தது. ஊடகங்கள் இதை கண்டுகொள்ளாததற்காகவும் நான் மிகவும் வருத்தமடைந்தேன்” என தன் மனதில் இருந்த மொத்தத்தையும் அந்த பேட்டியில் கொட்டி இருக்கிறார் ஜோதிகா.

இதையும் படியுங்கள்... Suriya 45: 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆர் ஜே பாலாஜி படத்துக்காக; பழைய ஃபார்முக்கு திரும்பிய சூர்யா!

Read more Photos on
click me!

Recommended Stories