Cibi Chakaravarthi Film With Nani Shelved : இயக்குனர் அட்லீயிடம் உதவி இயக்குனராக பணியாற்றி, சிவகார்த்திகேயன் நடித்த டான் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சிபி சக்கரவர்த்தி. இவர் இயக்கிய முதல் படமே ரூ.125 கோடிக்கு மேல் வசூலித்து பிரம்மாண்ட வெற்றியை ருசித்தது. இதையடுத்து இவரது இயக்கத்தில் நடிக்க விரும்பிய ரஜினிகாந்த், சிபியை அழைத்து கதை கேட்டார். பின்னர் அவரை வெயிட்டிங் லிஸ்ட்டில் போட்ட ரஜினிகாந்த், வேறு படங்களில் பிசியானதால் சிபி சக்கரவர்த்தி படத்தில் நடிக்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.