தென்னிந்திய ஹீரோக்களை பற்றி பேசி வாய்விட்டு மாட்டிக்கொண்ட ஜோதிகா... வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

Published : Sep 02, 2025, 01:56 PM IST

பாலிவுட் பட விழாவில் கலந்துகொண்டபோது தென்னிந்திய ஹீரோக்களை பற்றி நடிகை ஜோதிகா தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.

PREV
14
Jyothika controversial Comments on South Indian Actors

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஜோதிகா. நடிகர் சூர்யாவின் மனைவியான இவர், திருமணத்துக்கு பின் சினிமாவில் நடிக்காமல் இருந்தாலும், பின்னர் 16 வயதினிலே படம் மூலம் தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கினார். சமீபத்தில் குடும்பத்துடன் மும்பையில் குடியேறினார் ஜோதிகா. அங்கு சென்றதும் பாலிவுட்டில் தொடர்ந்து வாய்ப்புகளைப் பெற்று வருகிறார். இத்தனை ஆண்டுகள் தென்னிந்தியாவில் இருந்து, நட்சத்திர அந்தஸ்தைப் பெற்ற ஜோதிகா, இப்போது தென்னிந்திய சினிமா மற்றும் நடிகர்களை விமர்சித்து பேசி இருக்கிறார். சமீபத்தில் மும்பையில் நடைபெற்ற ஒரு இந்தி படத்தின் புரமோஷனில் கலந்து கொண்ட ஜோதிகா, சில சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்தார்.

24
தென்னிந்திய நடிகர்களை விமர்சித்த ஜோதிகா

ஜோதிகா கூறுகையில், “நான் தென்னிந்தியாவில் பல முன்னணி நடிகர்களுடன் பணியாற்றியுள்ளேன். ஆனால் அங்கு பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. சில படங்களில் எங்களை போஸ்டரில் கூட சேர்க்க மாட்டார்கள்,” என்று குறிப்பிட்டார். மேலும், பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் மற்றும் மலையாள நட்சத்திரம் மம்முட்டியைப் பாராட்டி, "அவர்கள் பெண்களை மதிப்புடன் நடத்துவார்கள், அவர்களின் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பார்கள்" என்றார்.

34
பதிலடி கொடுக்கும் நெட்டிசன்கள்

ஜோதிகாவின் இந்தக் கருத்துகள் சமூக வலைதளங்களில் வைரலானதால், தென்னிந்திய திரையுலக ரசிகர்கள், குறிப்பாக சூர்யா ரசிகர்கள் கடுமையாக அவரை சாடி வருகின்றனர். அவர் கூறிய கருத்துகளுக்கு முரணான பல போஸ்டர்கள் மற்றும் புகைப்படங்களைப் பகிர்ந்து, "இவை தென்னிந்திய படங்கள்தானே, இதில் உங்கள் புகைப்படங்கள் தெளிவாகத் தெரிகிறதே" என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். "சூர்யாவின் மனைவி என்ற மரியாதையால் நாங்கள் அமைதியாக இருக்கிறோம், ஆனால் இதுபோன்ற கருத்துகள் நல்லதல்ல." என்று சில ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

44
விளக்கம் அளிப்பாரா ஜோதிகா?

மேலும், மம்முட்டி சாரும் தென்னிந்திய திரையுலகைச் சேர்ந்தவர் என்பதை நினைவூட்டி, "தென்னிந்தியாவில் வளர்ந்த நீங்கள் இப்போது பாலிவுட்டுக்கு சென்றதும் தென்னிந்திய சினிமாவை விமர்சிப்பது என்ன நியாயம்?" என்று நெட்டிசன்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். ஜோதிகா இந்த விமர்சனங்களுக்குப் பதிலளிப்பாரா என்பது இப்போது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் தனது கருத்துகளுக்கு விளக்கம் அளிப்பாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆனால் இந்தக் கருத்துகள் சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளன.

Read more Photos on
click me!

Recommended Stories