புருஷன் வெர்ஷன் 5.0, லவ் யூ சொல்லி குழந்தையை கொடுத்துவிட்டு எஸ்கேப், மாதம்பட்டியை காணோம் – கிரிஷில்டா

Published : Dec 03, 2025, 07:28 AM IST

மாதம்பட்டி ரங்கராஜ் பற்றி திரும்ப திரும்ப கமெண்ட் பதிவு செய்து வரும் ஜாய் கிரிஷில்டா உருகி உருகி லவ் யூ லவ் யூ என்று சொல்லி கையில் குழந்தையை கொடுத்துவிட்டு எஸ்கேப் ஆன மாதம்பட்டி ரங்கராஜை காணோம் என்று எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

PREV
18
ஜாய் கிரிசில்டா

நாளுக்கு நாள் மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஜாய் கிரிசில்டா தொடர்பான பஞ்சாயத்து அதிகரித்து வருகிறது. சமையல் கலைஞரும், குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் நடுவருமான மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை ஏமாற்றிவிட்டதாக ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிசில்டா புகார் அளித்திருந்தார். அதோடு சோஷியல் மீடியாவில் தொடர்ந்து மாதம்பட்டி ரங்கராஜை விமர்சனம் செய்து பதிவுகளை பதிவிட்டு வருகிறார்.

28
மாதம்பட்டி ரங்கராஜ்

அதில் ரங்கராஜின் பாகசாலா நிறுவனத்தின் பெயரையும் குறிப்பிட்டு சர்ச்சையை ஏற்படுத்தினார். இதைத் தொடர்ந்து மாதம்பட்டி தங்கவேலு ஹாஸ்பிடாலிட்டி பிரைவேட் லிமிடெட் என்கிற நிறுவனம் மாதம்பட்டி பாகசாலா நிறுவனங்களை தொடர்புபடுத்து சமூக வலைதளங்களில் ஜாய் கிரிசில்டா பதிவுகளை வெளியிட தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.

38
கிரிசில்டா ரங்கராஜ்

இந்த வழக்கு விசாரணையின் போது மாதம்பட்டி பாகசாலா சார்பில் வாதிட்ட வழக்கறிஞர், ஜாய் கிரிசில்டாவின் இந்த பதிவால் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் செப்டம்பர் வரை கிட்டத்தட்ட ரூ.12 கோடி மதிப்பிலான கேட்டரிங் ஆர்டர்கள் ரத்தாகிவிட்டதாகவும், அதனால் அவருடைய சமூக வலைதள பதிவுகளை நீக்க உத்தரவிட வேண்டும் என்றும் மாதம்பட்டி பாகசாலா நிறுவனங்களை தொடர்புபடுத்தி கருத்துக்கள் பதிவிட தடை விதிக்க வேண்டும் என்றும் வாதிடப்பட்டது.

48
டிஎன்ஏ டெஸ்ட்

அதேபோல் ஜாய் கிரிசில்டா தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர், இந்த சமூக வலைதள பதிவுகளால், மாதம்பட்டி பாகசாலா நிறுவனத்தை பற்றியோ, அவர்களுடைய வர்த்தக நடவடிக்கை பற்றியோ எதுவும் சொல்லவில்லை. அப்படி இருக்கையில் எப்படி 12 கோடி இழப்பு ஏற்பட்டது என்பது குறித்த விவரங்களை அவர்கள் தெரிவிக்கவில்லை. கேட்டரிங் ஆர்டர்கள் ரத்தானதற்கும் ஜாய் கிரிசில்டாவின் கருத்துக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை எனவும் வாதங்களை முன்வைத்து இருந்தார்.

58
மாதம்பட்டி அண்ட் கிரிசில்டா

இதைத் தொடர்ந்து ஜாய் கிரிசில்டாவின் வாதங்களை ஏற்றுக்கொண்ட நீதிபதி, மாதம்பட்டி பாகசாலா, தடை கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இப்படி ஜாய் கிரிசில்டாவிற்கு சாதகமாக தீர்ப்பு வரவே குஷியான கிரிசில்டா தொடர்ந்து மாதம்பட்டி ரங்கராஜீற்கு எதிராக கருத்துக்களை பதிவிட்டு வந்தார். இந்த நிலையில் தான் கடந்த சில தினங்களுக்கு முன்பு ரஹா ரங்கராஜின் அப்பாவை காணவில்லை என்றும், டெஸ்டுக்கு பயந்து ஓடிவிட்டார் என்றும் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

68
மாதம்பட்டி ரங்கராஜை காணவில்லை

இந்த நிலையில் தான் இப்போது மற்றொரு பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார், அதில் புருஷன் வெர்ஷன் 5.0 என்று குறிப்பிட்டு லவ் யூ லவ் யூ என்று சொல்லி சொல்லி மாசமாக்கி கையில் ஒரு குழந்தையை கொடுத்துவிட்டு ஆளு எஸ்கேப் ஆகிவிட்டார். மாதம்பட்டி ரங்கராஜை காணவில்லை, டிஎன் ஏ டெஸ்டுக்கு பயந்து ஓடி ஒளிந்துவிட்டார் என்று குறிப்பிட்டார்.

78
ஓடி ஒளிந்த மாதம்பட்டி ரங்கராஜ்

ஏற்கனவே மாதம்பட்டி ரங்கராஜ் தெளிவாக வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். இந்த குழந்தை தன்னுடையது என்று நிரூபிக்கப்பட்டால் வாழ்நாள் முழுவதும் ஏற்றுக் கொள்ள தயார் என்றும், தான் டிஎன் ஏ டெஸ்டுக்கு மறுக்கவில்லை என்றும் கூறியிருக்கிறார். ஆனால், இதுவரையில் டிஎன் ஏ டெஸ்ட் பரிசோதனை செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

88
கிரிசில்டா

இதையெல்லாம் பார்க்கையில் வடிவேலு காமெடி தான் நினைவிற்கு வருகிறது. இதற்கு ஒரு எண்டே இல்லாமல் போய்க்கொண்டே இருக்கிறது. அவன் கிட்ட சொல்லி நிறுத்த சொல்லுங்கள் என்பது தான். இப்படி தொடர்ந்து மாதம்பட்டி ரங்கராஜிற்கு எதிராக கமெண்ட் பதிவிடுவதை ஜாய் கிரிசில்டா எப்போது நிறுத்த போகிறார் என்பது கேள்வியாக உள்ளது.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories