Karthigai Deepam 2 Serial Today Episode : கோயில் கும்பாபிஷேகத்தில் வெடிகுண்டு வைத்து ஊர் மக்களை கொல்ல திட்டமிட்ட காளியம்மாள், சிவனாண்டி மற்றும் முத்துவேல் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
கார்த்திகை தீபம் 2 சீரியலில் கும்பாபிஷேகத்தில் வெடிகுண்டு வைத்த காளியம்மாள், சிவனாண்டி மற்றும் முத்துவேல் ஆகியோரை ஊர் பொதுமக்கள் மரத்தில் கட்டி வைத்து சரமாரியாக தாக்குதல் நடத்தினர். அப்போது அங்கு வந்த கார்த்திக் ஊர் பொதுமக்களை தடுத்து நிறுத்தி அந்த மூவரையும் போலீசில் பிடித்துக் கொடுத்தார்.
25
கும்பாபிஷேகம்
கோயில் கும்பாபிஷேகத்தை நடத்த கார்த்திக் பல முறை போராடினாலும், அவரால் கும்பாபிஷேகத்தை நடத்தவே முடியவில்லை. கும்பாபிஷேகம் நடத்த மேற்கொள்ளப்பட்ட முதல் முயற்சியில் கார்த்திக்கின் அம்மா விபத்தில் உயிரிழந்தார். அப்போதும் கும்பாபிஷேகம் நின்றது. 2ஆவது முறையாக நல்லபடியாக சென்று கொண்டிருந்த நிலையில் ஊர் மக்களை கொல்ல காளியம்மாள், சிவனாண்டி மற்றும் முத்துவேல் ஆகியோர் இணைந்து கோயிலில் வெடிகுண்டு வைத்து கார்த்திக்கை பிளாக்மெயில் செய்து எப்படியோ தான் யார் என்ற உண்மையை சொல்ல வைத்தனர்.
35
உண்மையை சொல்லி மாட்டிக்கிட்ட
கார்த்திக் தான் யார் என்ற உண்மையை சொல்லவே ஆத்திரமடைந்த சாமுண்டீஸ்வரி கும்பாபிஷேகத்தை நடத்தவிடாமல் தடுத்து நிறுத்தினார். ராஜராஜன் எவ்வளவோ முயற்சி செய்தார். ஆனால், அவரால் முடியவில்லை. தனது கணவர் மற்றும் மகள்களை பிளாக்மெயில் செய்தே கும்பாபிஷேகத்தை நிறுத்தி அவர்களை அங்கிருந்து கூட்டிக் கொண்டு சென்றார்.
45
கும்பாபிஷேகத்தில் வெடிகுண்டு
இந்த சூழலில் கும்பாபிஷேகத்தில் வெடிகுண்டு வைத்த காளியம்மாள் உள்பட மூவரையும் போலீசார் கைது செய்தனர். ஆனால், சந்திரகலா மட்டும் இதிலிருந்து எஸ்கேப் ஆகிவிட்டார். கோயில் கும்பாபிஷேகத்தை நிறுத்த சந்திரகலாவும் தன்னால் முடிந்த எல்லா வேலைகளையும் செய்தார். இப்போது கணவர் உள்பட மூவரையும் போலீசார் கைது செய்தது அவருக்கு தெரியவாய்ப்பில்லை.
55
இனிமேல் உறவு இல்லை சாமுண்டீஸ்வரி
ஆனால், சாமுண்டீஸ்வரி இனிமேல் அந்த குடும்பத்திற்கும் நமக்கும் எந்த உறவும் இல்லை என்று திட்டவட்டமாக கூறிவிட்டார். இதனால், ரேவதி தான் பாதிக்கப்படுவார் என்பதை கொஞ்சம் கூட புரிந்துகொள்ளவில்லை. இந்த ஆண்களால் தான் தொடர்ந்து அவமானப்படுவதாகவும், ஏமாற்றப்படுவதாகவும் சாமுண்டீஸ்வரி கூறினார். இனி வரும் எபிசோடுகளில் அடுத்து என்ன நடக்கிறது என்பது பற்றி பார்க்கலாம்.