கேவலமான ரியாக்ஷன்..! ஓவர் உணர்ச்சி மயம்.. ஜாய் வெளியிட்ட மாதம்பட்டியின் புதிய வீடியோ

Published : Nov 27, 2025, 01:20 PM IST

மாதம்பட்டி ரங்கராஜ், தன்னை காதலிக்கும் போது அனுப்பிய ரொமாண்டிக் வீடியோவை ஜாய் கிரிசில்டா வெளியிட்டு டிஎன்ஏ டெஸ்ட் எடுக்க தைரியம் இல்லையா என கேள்வி எழுப்பி உள்ளார்.

PREV
14
Joy Crizildaa posted Madhampatty Rangaraj Video

சமையல் கலைஞரான மாதம்பட்டி ரங்கராஜ், ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டாவை காதலித்து திருமணம் செய்துகொண்டு ரகசியமாக குடும்பம் நடத்தி வந்திருக்கிறார். ஜாய் கிரிசில்டா கர்ப்பமான பின்னர் அவரை விட்டு பிரிந்து சென்ற மாதம்பட்டி ரங்கராஜ், எந்தவித ரெஸ்பான்ஸும் கொடுக்காததால், அவரைப் பற்றிய ரகசியங்களை ஒவ்வொன்றாக கட்டவிழ்த்துவிட்டார் ஜாய் கிரிசில்டா. அந்த வகையில், கடந்த ஜூலை மாதம் இருவரும் திருமணம் செய்துகொண்டபோது எடுத்த போட்டோவை வெளியிட்ட ஜாய், தான் ஆறு மாதம் கர்ப்பமாக இருக்கும் தகவலையும் வெளியிட்டார்.

24
ஜாய் கிரிசில்டா - மாதம்பட்டி ரங்கராஜ் மோதல்

பின்னர் மாதம்பட்டி ரங்கராஜ் மீது அடுக்கடுக்கான புகார்களை கூறிய ஜாய் கிரிசில்டா, அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல்நிலையத்தையும் நாடினார். பின்னர் அவர் மீது எந்தவித ஆக்‌ஷனும் எடுக்கப்படாததால், மகளிர் ஆணையத்திலும் புகார் அளித்தார் ஜாய். அவர் தன்னைப்போல் 10 பெண்களை ஏமாற்றி இருப்பதாக அதிர்ச்சி தகவலையும் வெளியிட்டார். பின்னர் மகளிர் ஆணையத்தில் இருவருமே விசாரணைக்கு ஆஜர் ஆகினர். அப்போது மாதம்பட்டி ரங்கராஜ், தான் ஜாய் கிரிசில்டா வயிற்றில் வளரும் குழந்தைக்கு தந்தை என்பதை ஒப்புக்கொண்டதாக ஜாய் சமூக வலைதளத்தில் பதிவிட்டார்.

34
டிஎன்ஏ டெஸ்ட் எடுக்க தைரியம் இல்லையா?

ஆனால் இதை திட்டவட்டமாக மறுத்து அறிக்கை வெளியிட்ட மாதம்பட்டி ரங்கராஜ், ஜாய் கிரிசில்டா சொன்னது பொய் என்றும், அவர் தன்னை மிரட்டி கல்யாணம் செய்துகொண்டதாகவும் கூறியதோடு, அது தன்னுடைய குழந்தை இல்லை என மறுத்ததோடு, அதற்காக டிஎன்ஏ டெஸ்ட் எடுக்கவும் தான் தயாராக இருப்பதாக கூறி இருந்தார். பின்னர் டிஎன்ஏ டெஸ்ட் எடுக்க ரெடியா என சில நாட்களுக்கு முன் பதிவிட்ட ஜாய், தற்போது ஹே புருஷா டிஎன்ஏ டெஸ்ட் எடுக்க தைரியம் இல்லையா என கேள்வி எழுப்பி இருக்கிறார்.

44
ஜாய் வெளியிட்டு புது வீடியோ

அதோடு மாதம்பட்டி ரங்கராஜ், தன்னுடன் குடும்பம் நடத்தி வந்தபோது தனக்கு அனுப்பிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் ஜாய். அதில் வழிந்து பேசும் மாதம்பட்டி ரங்கராஜ், ஐ லவ் யூ பொண்டாட்டி, நீ என் லைஃப்ல வந்ததுக்கு அப்புறம் நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன். கடவுள் கொடுத்த கிஃப்ட் எனக்கு. இன்னைக்கு ஃபுல்லா ஆபிஸ்ல தான் இருப்பேன். லவ்யூ, சீக்கிரம் வந்திரு... மிஸ் யூ என கேவலமான ரியாக்‌ஷன் கொடுத்து பேசி இருக்கிறார். மேலும் இந்த வீடியோ தன்மீது இருந்த காதலில் அவர் வெளியிட்டது என ஜாய் கிரிசில்டா குறிப்பிட்டுள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories