கர்ப்பமாக்கி ஏமாற்றிய மாதம்பட்டி ரங்கராஜ்
கடந்த ஜூலை 26ஆம் தேதி மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஜாய் கிரிசில்டா இருவரும் மிகவும் எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டனர். அதற்கு முன்னதாக இருவரும் கிட்டத்தட்ட 2 வருடங்களாக ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர். இடைத் தொடர்ந்து ஜாய் கிரிசில்டா கர்ப்பமானார். 6 மாதம் கர்ப்பமான நிலையில் தான் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். ஆனால், அதன் பிறகு ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகவில்லை. மேலும், திருமணம் தொடர்பான புகைப்படங்களை மாதம்பட்டி ரங்கராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிடவில்லை. அதோடு இதை பற்றி பொது வெளியில் ஒரு போதும் மாதம்பட்டி ரங்கராஜ் பேசவில்லை.
இந்த நிலையில் தான் தற்போது ஜாய் கிரிசில்டா 7 மாதம் கர்ப்பமாக இருக்கும் நிலையில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது: ரங்கராஜ் தான் எனது கணவர். எம்.ஆர்.சி. நகர் பகுதிநில் உள்ள கோவிலில் திருமணம் செய்து கடந்த இரண்டு ஆண்டுகளாக இணைந்து வாழ்ந்து வந்ததாக தெரிவித்தார். ஆனால் திடீரென கடந்த இரண்டு மாதங்களாக அவர் என்னை விட்டு விலகி விட்டார். என்னிடம் தொடர்பை முற்றிலும் துண்டித்துள்ளதாக கூறினார்.