நடிகை ஜெனிலியா தமிழ் சினிமா பக்கம் தலைகாட்டாமல் இருந்தாலும், அவர்மீது ரசிகர்கள் காட்டும் அன்பு இன்னும் குறைந்தபாடில்லை. அண்மையில் ரவி மோகனின் ஸ்டூடியோ திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, அவர் தன்னுடைய ஹாசினி கதாபாத்திரத்தை ரீகிரியேட் செய்து அசத்தினார்.
26
ஜெனிலியா அறிமுகம்
நடிகை ஜெனிலியாவை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தியது இயக்குனர் ஷங்கர் தான். இவர் கடந்த 2003-ம் ஆண்டு ரிலீஸ் ஆன பாய்ஸ் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகம் ஆனார். அப்படத்தில் நடிகர் சித்தார்த்துக்கு ஜோடியாக நடித்திருந்தார். அப்படம் ஹிட் ஆன பின் கோலிவுட்டில் பிசியானார் ஜெனிலியா.
36
பிசியான ஹீரோயின்
பாய்ஸ் படம் ஹிட்டான கையோடு ஜெனிலியாவுக்கு விஜய் உடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. சச்சின் படத்தில் இவர் நடித்த ஷாலினி கதாபாத்திரம் வேறலெவலில் ரீச் ஆனது. பின்னர் சந்தோஷ் சுப்ரமணியம், உத்தம புத்திரன், வேலாயுதம் போன்ற படங்களில் நடித்தார்.
வேலாயுதம் தான் ஜெனிலியா தமிழில் நடித்த கடைசி படம். அதன்பின்னர் பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பின்னர் தமிழ் சினிமா பக்கம் அவர் தலைகாட்டவே இல்லை.
56
மீண்டும் ரீ-எண்ட்ரி
தமிழில் கடந்த 14 ஆண்டுகளாக நடிக்காமல் இருந்த ஜெனிலியா, தற்போது கம்பேக் கொடுக்க தயாராகி வருவதாக கூறப்படுகிறது. இவர் விரைவில் தமிழ் படம் ஒன்றில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
66
அழகில் ஜொலிக்கும் ஜெனிலியா
நடிகை ஜெனிலியாவுக்கு தற்போது 38 வயது ஆனாலும் பார்ப்பதற்கு 20 வயது பெண் போலவே ஜொலிக்கிறார். அவர் நடத்திய லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.