தாலி கட்டுன புருஷங்கிட்ட தான கேட்டேன் - ஸ்ருதி பிரியா முகத்திரையை கிழித்த ஜாய் கிரிசில்டா!

Published : Nov 09, 2025, 01:32 PM IST

Joy Crizildaa Exposes Sruthi Priya :ஜாய் கிரிசில்டா மீது சில குற்றச்சாட்டுகளை முன் வைத்து, மாதம்பட்டியின் முதல் மனைவியான ஸ்ருதி பிரியா வெளியிட்ட அறிக்கைக்கு தற்போது ஜாய் தன்னுடைய விளக்கத்தை வீடியோ வெளியிட்டு தெரிவித்துள்ளார்.

PREV
18
ஜாய் கிரிசில்டா மற்றும் ஸ்ருதி பிரியா

ஜாய் கிரிசில்டா மீது சில குற்றச்சாட்டுகளை முன் வைத்து, மாதம்பட்டியின் முதல் மனைவியான ஸ்ருதி பிரியா வெளியிட்ட அறிக்கைக்கு தற்போது ஜாய் தன்னுடைய விளக்கத்தை வீடியோ வெளியிட்டு தெரிவித்துள்ளார். ஏற்கனவே பிரபல இயக்குனரை திருமணம் செய்து, 2 வருடத்திலேயே அவரிடம் இருந்து விவாகரத்து பெற்ற ஜாய் கிரிசில்டா, தன்னுடைய கேரியரில் கவனம் செலுத்தி வந்த போது தான், மாதம்பட்டி ரங்கராஜின் பர்சனல் ஸ்டைலிஸ்ட்டாக பணியாற்றும் வாய்ப்பை பெற்றார்.

28
மாதம்பட்டி ரங்கராஜ் 2ஆவது திருமணம்

குக் வித் கோமாளி போன சீசனில் கூட, ஜாய் தான் மாதம்பதிக்கு ஸ்டைலிஸ்ட்டாக இருந்துள்ளார். அப்போது இவர்களுக்குள் ஏற்பட்ட நெருக்கம் காதலாக மாறியுள்ளது. ஜாய் கிரிசில்டாவிடம், தனக்கும் தன்னுடைய முதல் மனைவிக்கும் விவாகரத்து சமாச்சாரங்கள் சென்று கொண்டிருப்பதாக கூறியதை தொடர்ந்து ஜாய், ரங்கராஜ் பேச்சை நம்பி லிவிங் டூ கெதர் வாழ்க்கை நடத்தி வந்தார். பின்னர் ரங்கராஜ் எளிமையான முறையில் அவரை திருமணமும் செய்து கொண்டார். இதை தொடர்ந்தே ரங்கராஜ் மூலம் ஜாய் கர்ப்பமாகி, தற்போது ஆண் குழந்தைக்கும் தாய் ஆகி உள்ளார்.

38
மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் கிரிசில்டா

ஜாய் கர்ப்பதால் தன்னுடைய வாழ்க்கையில் பிரச்சனை வரும் என்பதை அறிந்து, பல முறை குழந்தையை ரங்கராஜ் அபார்ஷன் செய்யக்கூறி தன்னை அடித்து துன்புறுத்தியதாக ஏற்கனவே தன்னுடைய புகார் மனுவில் ஜாய் கிரிசில்டா கூறி இருந்தார். அதே போல் மகளிர் ஆணையத்தில் ஜாய், ரங்கராஜ் மீது கொடுத்த வழக்கின் விசாரணையின் போது "ரங்கராஜ், ஜாய் தன்னை மிரட்டி திருமணம் செய்ததாகவும், DNA பரிசோதனையில் குழந்தை தன்னுடையது என உறுதியானால் அதன் வாழ்நாள் முழுக்க ஆகும் செலவை ஏற்று கொள்வதக தெரிவித்ததாக அவரே அறிக்கை மூலம் தெரிவித்தார்".

48
மாதம்பட்டி ரங்கராஜ் அண்ட் ஜாய் கிரிசில்டா விவகாரம்

இவர்கள் இருவரின் விவாதம் ஒருபக்கம் சென்று கொண்டிருக்க... திடீர் என தன்னுடைய கணவரை பாதுகாக்க போகிறேன் என உள்ளே குதித்தார் ரங்கராஜன் முதல் மனைவியான ஸ்ருதி பிரியா. இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் கடிதத்தில் ஜாய் கிரிசில்டா தன்னுடைய கணவரிடம் இருக்கும் பணம் மீது கண் வைத்து தான் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதாகவும்... நாங்கள் விவாகரத்து பெற்று பிரிய வேண்டும் என்பதே அவரின் நோக்கம் என பாய்ண்ட் அவுட் செய்து சில கருத்துக்களை முன் வைத்தார்.

58
ஜாய் கிரிசில்டா வீடியோ

இதை பார்த்து கடுப்பான ஜாய் கிரிசில்டா, தற்போது ஸ்ருதி பிரியாவுக்கு வீடியோ ஒன்றை போட்டு பதிலடி கொடுத்துள்ளார்." அதில் ஜாய் கூறியுள்ளதாவது.... பொதுவாக நான் எதெற்கெடுத்தாலும் வீடியோ போட்டு பேசுபவர் அல்ல. ஆனால் சில விஷயங்களை தெளிவு படுத்த வேண்டி உள்ளது. இன்று என் கணவரை பாதுகாப்பேன் என கூறி இருக்கும் ஸ்ருதி பிரியா கடந்த 7 வருடமாக எங்கே போனார் என தெரியவில்லை. நான் ரங்கராஜிடம் பணம் கேட்டதாக கூறி இருந்தார். ஆம் நான் பணம் கேட்டது உண்மை தான். அது எதற்காக கேட்டேன் என்பது அவருக்கே தெரியும்.

68
புருஷனிடம் பணம் கேட்டது உண்மை தான்

ஒருத்தருக்கு பணம் கொடுக்க வேண்டி இருந்தது. அதனால் கேட்டேன். இதற்காக என் நண்பர் சொன்னபடி மேனிபெஸ்ட் கூட செய்துள்ளேன். நான் ஒரு இண்டிபெண்டெண்ட் வுமன். கல்லூரி முடித்ததுமே வேலை செய்ய துவங்கி விட்டேன். என் அப்பா - அம்மாவிடம் கூட பணம் கேட்க யோசிப்பேன் . ஆனால் ரங்கராஜுக்காக தான் என்னுடைய வேலைகள் அனைத்திலும் இருந்து ஒதுங்கி அவரை மட்டுமே கவனித்து வந்தேன். என்னிடம் காசு இல்லை... அவர் என்னை திருமணம் செய்தது உண்மை... அப்படி இருக்கும் போது என் கணவரிடம் தானே என்னால் காசு கேட்க முடியும். இதில் என்ன தவறு இருக்கிறது.

78
ஸ்ருதி பிரியா, மாதம்பட்டி ரங்கராஜ் அண்ட் ஜாய் கிரிசில்டா

மேலும் பல முறை நான் சில விஷயங்களை தெளிவு படுத்திக்கொள்ள ஸ்ருதி பிரியாவுக்கு போன் செய்துள்ளேன். அவர் ஒரு முறை கூட என் அழைப்பை எடுத்து இல்லை. சரி வாட்ஸ் ஆப்பிள் செய்தால் யார் என்பது தெரிந்து போனை எடுப்பார் என போன் செய்தேன் அப்போதும் அவர் என்னுடைய போனை நிராகரித்தார் . ரங்கராஜின் நம்பரை கூட அவர் பிளாக் பண்ணி தான் வைத்திருந்தார்.

88
மாதம்பட்டி ரங்கராஜ், ஜாய் கிரிசில்டா

அதே போல் ரங்கராஜன் குடும்பத்தினர் அனைவருக்குமே அவர் என்னை திருமணம் செய்து கொண்டது தெரியும். அவர் என்னை கோயம்பத்தூரில் உள்ள அவரின் வீட்டுக்கே அழைத்து சென்றுள்ளார். ஆனால் இப்போது அவர் தான் மாற்றி பேசுகிறார். இப்போது கணவரை பாதுகாக்க துடிக்கும் ஸ்ருதி... உண்மை என்ன என்பது உங்களுக்கு தெரியும் உண்மையின் பக்கம் கொஞ்சம் நில்லுங்கள். ரங்கராஜ் எதுவுமே தெரியாது அவருடைய ரத்தத்தில் உருவான அந்த குழந்தையை அசிங்கப்படுத்துவது போல் கருத்து தெரிவித்துள்ளார். உண்மையை யாராலும் மாற்ற முடியாது. உண்மை கண்டிப்பாக வெளியே வரும் என்பது போல் ஆவேசமாக தன்னுடைய வீடியோவில் பேசியுள்ளார். குறிப்பாக ஸ்ருதி பிரியா கணவருக்காக இன்று மாற்றி பேசி வருகிறார் என அவரின் முகத்திரையையும் கிழித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories