விஜய் டிவி குக் வித் கோமாளியில் இருந்து ரங்கராஜை தூக்கு! கொதிக்கும் நெட்டிசன்!

Published : Aug 29, 2025, 07:42 PM IST

Netizens comment to remove Madhampatty Rangaraj From CWC Season 6 : இவ்வளவு தூரம் நடந்த பிறகு மாதம்பட்டி ரங்கராஜ் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு நடுவராக இருக்க கூடாது, அவரை உடனே நீக்க வேண்டும் என்று் நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கொதித்தெழுகின்றனர்.

PREV
16

மாதம்பட்டி ரங்கராஜிற்கு எதிராக நெட்டிசன்கள் கொதித்தெழுவதற்கு முக்கிய காரணமே அவரது 2ஆவது மனைவி ஜாய் கிரிசில்டா தான். கடந்த ஜூலை மாதம் மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஜாய் கிரிசில்டா இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. மிகவும் எளிமையான முறையில் நடந்த திருமணத்தின் போது ஜாய் கிரிசில்டா 6 மாதம் கர்ப்பமாக இருந்துள்ளார். இதைத் தொடர்ந்து ஜாய் கிரிசில்டா திருமணத்திற்கு பிறகு எடுத்த புகைப்படங்களை தனது எக்ஸ் பக்கமான https://x.com/joy_stylist என்ற பக்கத்தில் பதிவிட்டு வந்தார்.

26

கடந்த ஜூலை 26ஆம் தேதி மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஜாய் கிரிசில்டா இருவரும் மிகவும் எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டனர். அதற்கு முன்னதாக இருவரும் கிட்டத்தட்ட 2 வருடங்களாக ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர். இடைத் தொடர்ந்து ஜாய் கிரிசில்டா கர்ப்பமானார். 6 மாதம் கர்ப்பமான நிலையில் தான் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். ஆனால், அதன் பிறகு ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகவில்லை. மேலும், திருமணம் தொடர்பான புகைப்படங்களை மாதம்பட்டி ரங்கராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிடவில்லை. அதோடு இதை பற்றி பொது வெளியில் ஒரு போதும் மாதம்பட்டி ரங்கராஜ் பேசவில்லை.

36

இந்த நிலையில் தான் தற்போது ஜாய் கிரிசில்டா 7 மாதம் கர்ப்பமாக இருக்கும் நிலையில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது: ரங்கராஜ் தான் எனது கணவர். எம்.ஆர்.சி. நகர் பகுதிநில் உள்ள கோவிலில் திருமணம் செய்து கடந்த இரண்டு ஆண்டுகளாக இணைந்து வாழ்ந்து வந்ததாக தெரிவித்தார். ஆனால் திடீரென கடந்த இரண்டு மாதங்களாக அவர் என்னை விட்டு விலகி விட்டார். என்னிடம் தொடர்பை முற்றிலும் துண்டித்துள்ளதாக கூறினார்.

46

இப்போது என் வயிற்றில் வளரும் குழந்தைக்கு ரங்கராஜ்தான் தந்தை, தற்போது 7 மாதம் கர்ப்பமாக இருப்பதாகவும். மாதம்பட்டி ரங்கராஜை நேரில் சந்திக்க முயன்றபோது, இரண்டு முறையும் என்னை அடித்து விரட்டியதாக தெரிவித்தார். மேலும் கருவை கலைக்கும் படி வற்பறுத்தி அடித்ததாகவும் தெரிவித்தார். இதனையடுத்து அவருடன் பேச முயன்றும், அவருடைய நண்பர்கள் என்னை சந்திக்க விடாமல் தடுப்பதாக குற்றம்சாட்டினார். இப்போது என் வயிற்றில் வளரும் குழந்தைக்கு ரங்கராஜ்தான் தந்தை. எனக்கும் என் குழந்தைக்கும் நேர்ந்த இந்த ஏமாற்றத்திற்கு அவர் பொறுப்பேற்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

56

அவர் என்னுடன் சேர்ந்து வாழ போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்திள்ளார். தன்னை திருமணம் செய்து கொள்ளும் போது தனது மனைவியை விட்டு பிரிந்து இருப்பதாக தெரிவித்ததால் தான் திருமணம் செய்து கொண்டதாக கூறினார். இந்த நிலையில் தான் இவ்வளவு தூரம் நடந்த பிறகும் கூட மாதம்பட்டி ரங்கராஜ் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக இருக்கலாமா? அவரை உடனே தூக்குங்க என்று நெட்டிசன்கள் விமர்சனங்களை கூறி வருகின்றனர்.

66

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி சீசன் 6 நிகழ்ச்சியில் மாதம்பட்டி ரங்கராஜ் நடுவராக இருக்கிறார். இதற்கு முன்னதாக கடந்த சீசனில் அவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் 5ஆவது சீசனில் நடுவராக இருந்தார். இந்த நிலையில் தான் அவருக்கு எதிராக நெட்டிசன்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories