நிதீஷ் சகாதேவ் இயக்கத்தில் நடிகர் ஜீவா ஹீரோவாக நடித்து இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆன தலைவர் தம்பி தலைமையில் திரைப்படத்தின் வசூல் நிலவரத்தை பார்க்கலாம்.
தமிழ் சினிமாவில் ஒரு அண்டர்ரேட்டட் ஹீரோவாக வலம் வருபவர் ஜீவா. இவர் நடிப்பில் வெளியான பல படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. எப்படியாவது கம்பேக் கொடுக்க வேண்டும் என்று ஆவலோடு காத்திருந்தார் ஜீவா. அவருக்கு நீண்ட இடைவெளிக்குப் பிறகு, ஒரு பிரம்மாண்ட வெற்றி கிடைத்துள்ளது. இந்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் ஆன 'தலைவர் தம்பி தலைமையில்' (TTT) என்ற படத்தின் மூலம் அவர் ஒரு பெரிய கம்பேக் கொடுத்துள்ளார்.
24
தலைவர் தம்பி தலைமையில் படத்தின் வசூ
நிதீஷ் சகாதேவ் இயக்கத்தில் உருவான 'தலைவர் தம்பி தலைமையில்' திரைப்படம் ஜனவரி 15 அன்று பொங்கல் வெளியீடாக வந்தது. முதல் காட்சியில் இருந்தே வரவேற்பைப் பெற்ற இப்படம், வாய்மொழி விளம்பரம் மூலம் பிரபலமானது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் TTT-யின் பாக்ஸ் ஆபிஸ் விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. சாக்னில்க் என்ற டிராக்கிங் தளத்தின் அறிக்கையின்படி, ஜீவாவின் இப்படம் வெளியான ஐந்து நாட்களில் 20 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது. இந்தியாவில் மட்டும் இப்படம் 19 கோடிக்கு மேல் வசூலை அள்ளி இருக்கிறதாம்.
34
தலைவர் தம்பி தலைமையில் பட்ஜெட்
வெளியான நான்கு நாட்களிலேயே TTT தனது பட்ஜெட் தொகையைத் திரும்பப் பெற்றுவிட்டதாகவும் சாக்னில்க் அறிக்கை கூறுகிறது. படத்தின் பட்ஜெட் 10 கோடி ரூபாய். தமிழ்நாட்டில் இருந்து 16.1 கோடி ரூபாயை இப்படம் வசூலித்துள்ளது. கர்நாடகாவில் 83 லட்சம், கேரளாவில் 62 லட்சம் என மற்ற இடங்களில் வசூல் செய்துள்ளது. இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியான படங்களில் தலைவர் தம்பி தலைமையில் திரைப்படம் தான் வெற்றிக் கனியை ருசித்துள்ளது.
TTT ஒரு பக்கா தமிழ் கிராமத்துப் பின்னணியில் எடுக்கப்பட்ட திரைப்படம். ஒரு திருமண வீடு மற்றும் பக்கத்து வீட்டில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து கதை நகர்கிறது. இப்படத்திற்குப் பாராட்டுக்கள் கிடைத்து வருகின்றன. சான்ஜோ ஜோசப் மற்றும் அனுராஜ் ஓ.பி ஆகியோர் இணைந்து கதை எழுதியுள்ளனர். ஜீவாவுடன் பிரார்த்தனா நாதன் மற்றும் தம்பி ராமையா முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். எப்படியிருந்தாலும், 'ஜனநாயகன்' படத்தின் வெளியீட்டு மாற்றத்தால், பொங்கல் வெளியீடாக வந்த TTT மாபெரும் வெற்றியை நோக்கிச் செல்கிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.