சூர்யா, விஜய்சேதுபதியை அடுத்து ஜெயம் ரவி கொடுத்த ஷாக்... வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு...!

First Published | Dec 24, 2020, 2:00 PM IST

இந்த படம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக நீண்ட நாட்களாகவே தகவல்கள் வெளியாகி வந்தது. தற்போது அதனை உறுதி செய்து ஜெயம் ரவி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

ரோமியோ ஜூலியட், போகன் படங்களைத் தொடர்ந்து 3வது முறையாக லக்‌ஷ்மண் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள திரைப்படம் பூமி. ஜெயம் ரவியின் 25வது படமான இதில் நிதி அகர்வால், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு இமான் இசையமைத்துள்ளார். மே 1-ம் தேதி வெளியாக இருந்த இத்திரைப்படம் கொரோனா அச்சுறுத்தலால் தள்ளிப் போனது.
இந்த படம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக நீண்ட நாட்களாகவே தகவல்கள் வெளியாகி வந்தது. தற்போது அதனை உறுதி செய்து ஜெயம் ரவி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
Tap to resize

எனது நீண்ட திரைப்பயணம் முழுக்க, முழுக்க ரசிகர்களாகிய உங்களால் ஆனது. நீங்கள் அளித்த அளவற்ற அன்பு என்மேல் நீங்கள் வைத்த மிகப்பெரும் நம்பிக்கை, நீங்கள் அளித்த உத்வேகம் தான், சிறப்பான படங்களில் நான் பணியாற்ற காரணம். எனது கடினமான காலங்களில் என்னை உங்களின் சொந்த ரத்தம் போலவே நினைத்து ஆதரவளித்தீர்கள்.
உங்களின் இந்த ஆதரவோ, சினிமா மீதான எனது காதலை நிலைபெற செய்தது. நீங்கள் இல்லாமல் என்னால் இத்தனை தூரம் வெற்றிகரமாக பயணித்திருக்க முடியாது. உங்களை எனது குடும்பத்தினராகவே கருதுகிறேன் ‘பூமி’ திரைப்படம் எனது சினிமா பயணத்தில் ஒரு மைல் கல்.
இந்தப் படம் எனது திரைப்பயணத்தில் 25-வது படம் என்பதைத் தாண்டி என் மனதிற்கு மிகவும் நெருக்கமான படம். கோவிட் -19 காலத்தில் ரிலீஸாகும் படங்களின் வரிசையில் இந்தப் படமும் இணைந்திருக்கிறது.இந்தப் படத்தின் மூலம் உங்கள் இல்லம் தேடி உங்கள் வரவேற்பறைக்கே வரவுள்ளது.
டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் உடன் இணைந்து உங்களின் 2021 பொங்கல் கொண்டாட்டத்தில் பங்கு கொள்வதில் நான் பெருமை கொள்கிறேன். நிறைய பண்டிகை காலங்களில் திரையரங்கில் வந்து எனது திரைப்படத்தைப் பார்த்து பண்டிகையை கொண்டாடியுள்ளீர்கள். இந்த பொங்கல் பண்டிகை தினத்தில் எனது அழகான திரைப்படத்துடன் உங்கள் வீட்டில் உங்களை சந்திப்பதை ஆசிர்வாதமாக கருதுகிறேன்” என தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னதாக சூர்யாவின் சூரரைப் போற்று, விஜய்சேதுபதியின் கபெ ரணசிங்கம் உள்ளிட்ட படங்கள் ஓடிடியில் வெளியானது. தற்போது தியேட்டர்கள் திறக்கப்பட்டு 50 சதவீத பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள போதும், ஜெயம் ரவியின் பூமி திரைப்படம் ஓடிடியில் வெளியாக உள்ளது தியேட்டர் உரிமையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Latest Videos

click me!